Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆவின் பொருட்களில் ‘ஹலால்’ வார்த்தை: அமைச்சர் நாசர் விளக்கம்!

Webdunia
புதன், 21 செப்டம்பர் 2022 (15:47 IST)
ஆவின் பொருட்களில் ஹலால் என்ற வார்த்தை இருந்ததை அடுத்து பெரும் சர்ச்சைக்குரிய ஆகியுள்ள நிலையில் இதுகுறித்து பால்வளத்துறை அமைச்சர் நாசர் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.
 
 ஹலால் என்ற வார்த்தை ஆவின் பொருட்களில் இருந்ததை அடுத்து பலர் இது குறித்து விளக்கம் கேட்ட நிலையில் இது குறித்து விளக்கமளித்த பால்வளத்துறை அமைச்சர் நாசர், ‘ஹலால்’ என்ற வார்த்தை இருந்தால் மட்டுமே வெளிநாட்டில் விற்பனை செய்ய முடியும் என்றும் அதனால்தான் அந்த வார்த்தை அச்சிடப்பட்டதாக தெரிவித்தார்.
 
மேலும் ஹலால் என்ற வார்த்தை அச்சிடும் நடைமுறை கடந்த அதிமுக ஆட்சியில் இருந்து தொடர்வதாகவும் அவர் குறிப்பிட்டார்
 
முன்னதாக ஆவின் பொருட்களில் ஹலால் என்ற வார்த்தையை அச்சிடப்பட்டு இருந்ததால் அதை புறக்கணித்ததாக சமூக வலைதளங்களில் புகைப்படத்துடன் தகவல் பரவியது. இதனால் அமைச்சர் விளக்கம் அளித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பூமிக்கு திரும்பாத சுனிதா வில்லியம்ஸ்! விண்வெளியில் படைத்த புதிய சாதனை!

புதிய பாம்பன் பாலத்தில் இன்று கப்பல் கடக்கும் சோதனை! - திறப்பு விழா எப்போது?

கடும் எதிர்ப்பு எதிரொலி.. காலை உணவு திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டம் ரத்து..!

விமான விபத்திற்கு, பைடன், ஒபாமா ஆட்சி தான் காரணம்: டொனால்டு டிரம்ப் குற்றச்சாட்டு..!

பஞ்சாப் முதல்வர் வீட்டில் சோதனை.. தேர்தல் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments