Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா காலத்தை போல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை: வைரஸ் காய்ச்சல் குறித்து அமைச்சர்..!

Webdunia
வெள்ளி, 10 மார்ச் 2023 (11:17 IST)
கொரோனா காலத்தில் இருந்ததைப் போல் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தற்போது மிக வேகமாக பரவி வரும் புதிய வைரஸ் காய்ச்சல் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
 
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் புதிய வகை வைரஸ் காய்ச்சல் பரவிக் கொண்டிருக்கும் நிலையில் அமைச்சர் மா சுப்பிரமணியன் இது குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளார். 
 
கொரோனா வைரஸ் காய்ச்சலை கண்டு பெரிய அளவில் பதட்டம் அடைய தேவை இல்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் கொரோனா காலத்தைப் போல முன்னெச்சரிக்கை நடவடிக்கையை கடைபிடிக்க வேண்டும் என ஐசிஎம்ஆர் வலியுறுத்தி உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். 
 
3 அல்லது 4 நாட்கள் ஓய்வு எடுத்துக் கொண்டால் இந்த வைரஸ் காய்ச்சலை குணப்படுத்த முடியும் என்றும் வைரஸ் காய்ச்சல் பாதிக்கப்பட்ட ஒருவர் மூலம் பிறரும் பாதிக்கப்படலாம் என ஐசிஎம்ஆர் தகவல் தெரிவிப்பதால் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7 மாவோயிஸ்டுகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை! அதிகாலையில் நடந்த அதிரடி..!

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசைக் கோரியதே திமுக அரசு தான்: அண்ணாமலை

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. கல்வி அமைச்சர் அறிவிப்பு..!

முதல்வரின் திமிர் பேச்சுக்கு மக்கள் தக்க பாடத்தை நிச்சயம் புகட்டுவார்கள்: ஈபிஎஸ்

லண்டனில் இருந்து சென்னை திரும்பினார் அண்ணாமலை.. முதல் பேட்டியில் விஜய் குறித்த கருத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments