Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வழக்கம் போல் பள்ளி கல்லுரிகள் செயல்படும் - அமைச்சர் மா.பா. பாண்டியராஜன்

Webdunia
திங்கள், 5 டிசம்பர் 2016 (01:54 IST)
இன்று வழக்கம் போல பள்ளி கல்லுரிகள் செயல்படும் என தமிழகத்தின் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.


 

கடந்த செப்டம்பர் 22ம் தேதி முதல் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைந்து விட்டதாகவும், அவர் விரும்பும் நேரத்தில் வீட்டுக்கு செல்லலாம் என அப்பல்லோ நிர்வாகம் கூறியது. இதனையடுத்து, தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து கடந்த 19ஆம் தேதி அன்று சிறப்பு பொதுப்பிரிவு வார்டுக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென அவசர சிகிச்சை பிரவில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுவதாக கூறப்பட்டது. இதுகுறித்து அப்பல்லோ மருத்துவமனை சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது.

இந்நிலையில் சிறிது நேரத்திற்கு முன்பு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மா.பா.பாண்டியரஜனின் இன்று வழக்கம் போல் பள்ளிகள், கல்லுரிகள் வழக்கம் போல் செயல்படும் என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, நிலமையை கட்டுக்குள் கொண்டு வர காவல்துறை டிஜிபி காவல்துறையின் அனைத்து அதிகாரிகளும் நாளை பணிக்கு வர வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறார். இதற்கிடையில், அமைச்சரின் தகவல் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

ஹாலிவுட்டை எரித்த காட்டுத்தீ! வீடுகளை இழந்து தவிக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்!

சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.. திருப்பதி சம்பவம் குறித்து ரோஜா..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லையா? திமுக vs நாதக?

அடுத்த கட்டுரையில்
Show comments