Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னது ஸ்டாலின் சொன்னதால செஞ்சோமா?! – அப்செட்டான அமைச்சர்!

Webdunia
செவ்வாய், 9 ஜூன் 2020 (15:03 IST)
10-ம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்ய திமுக கொடுத்த அழுத்தத்தால் அரசு ரத்து செய்துள்ளதாக திமுகவினர் ட்ரெண்ட் செய்து வரும் நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் ஜூன் 15ம் தேதி முதல் நடக்கவிருந்த 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்வதாகவும், மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். முன்னதாக 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வலியுறுத்தி வந்த திமுக மற்று கூட்டணி கட்சிகள் நாளை கருப்பு கொடி போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில் இந்த அறிவிப்பு வெளியானது.

அதை தொடர்ந்து திமுகவின் அழுத்தத்தினாலேயே அரசு தேர்வை ரத்து செய்ததாக சமூக வலைதளங்களில் திமுகவினர் # MKS சொல்கிறார் EPS செய்கிறார் என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இந்நிலையில் தேர்வு ரத்து குறித்து விளக்கமளித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார் “யாருடைய நிர்பந்தத்தினாலும் பொதுத்தேர்வை ரத்து செய்யவில்லை. பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டே பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

பாஜக 305 இடங்களில் வெற்றி பெறும்.! அமெரிக்க அரசியல் ஆலோசகர் கணிப்பு..!

பாஜகவுக்கு எதிராக பேசினால் கைது நடவடிக்கை.! அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு..!!

சமூகத்தை பிளவுபடுத்தும் பிரச்சாரத்தை நிறுத்துங்கள்.! பாஜக - காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் கண்டனம்..!!

அரசுப் பேருந்துகளில் காவலர்களுக்கு இலவசப் பயணம்..! நடைமுறைப்படுத்த அண்ணாமலை வலியுறுத்தல்..!

பாஜக ஆட்சியில் மிகப் பெரிய ஊழல்.! ஆட்சிக்கு வந்ததும் விசாரிப்போம்..! ராகுல் காந்தி..!!

அடுத்த கட்டுரையில்
Show comments