Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டாலின் பதவிக்கு ஆப்பு? துரைமுருகனுக்கு கொம்பு சீவும் ஜெயகுமார்!

Webdunia
வியாழன், 23 ஜனவரி 2020 (13:06 IST)
திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு சவால் விட்டுள்ளார் அதிமுக அமைச்சர் ஜெயகுமார்.
சமீபத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுகவில் உள்ள அனைவருமே முதலமைச்சர்கள் தான் என கூறியிருந்தார். இதை விமர்சிக்கும் விதமாக திமுக பொருளாளர் துரைமுருகன், அதிமுகவில் அனைவருமே முதலமைச்சர்கள்தான் என்று கூறும் ஈபிஎஸ், ஓபிஎஸ்க்கு முதலமைச்சர் பதவியை விட்டுத்தருவாரா என கேள்வி எழுப்பினார். 
 
அதிமுக சார்ந்த அனைத்து விஷயங்களிலும் முதல் ஆளாய் வந்து பேட்டி கொடுக்கும் அமைச்சர் ஜெயகுமார் இதற்கும் ஒரு பதில் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
 
எடப்பாடி பழனிச்சாமி தனது பதவியை ஓ.பன்னீர்செல்வத்திற்கு விட்டுத்தருவாரா என கேட்கும் துரைமுருகன், முடிந்தால் திமுகவின் தலைவராகி காட்டட்டுமே என அமைச்சர் ஜெயக்குமார் சவால் விடுத்துள்ளார்.
 
மேலும், உள்ளாட்சித் தேர்தல் என்பது ஒரு இண்டர்வல், அதிமுக தான் எப்போதும் ஹீரோ, 2021 ஆம் ஆண்டு கிளைமாக்ஸில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என தெரிவித்தார்.
 
திமுக தலைவர் பதவி குறித்த சவாலுக்கு துரைமுருகன் என்ன பதில் வைத்துள்ளார் என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெயில் தாக்கம் எதிரொலி: 1-5 வகுப்புகளுக்கு முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு..!

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்..! சாலைகள் இரண்டாக பிளந்ததால் மக்கள் அதிர்ச்சி..!

தோண்ட தோண்ட பிணங்கள்.. மியான்மரில் தொடரும் சோகம்! பலி எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்வு!

நகராட்சிகளாக மாறிய 7 பேரூராட்சிகள்: தமிழக அரசு அரசாணை..!

ஏலச்சீட்டு நடத்தி மோசடி.. கணவருடன் கைதான முன்னாள் பாஜக பெண் நிர்வாகி..!

அடுத்த கட்டுரையில்
Show comments