Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பலபேரை வாரிவிட்டு ஆட்சிக்கு வந்தவர்தான் எம்.ஜி.ஆர்: அமைச்சரின் பேச்சால் கடும் சர்ச்சை

Webdunia
திங்கள், 11 பிப்ரவரி 2019 (12:27 IST)
பல பேர் மீது குறைகூறி தான் எம்.ஜி.ஆர் ஆட்சியை பிடித்தார் என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியது கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
 
அதிமுக அமைச்சர்கள் பலர் வாயை திறந்தாலே சர்ச்சை தான். அதிலும் முக்கியமாக அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் சர்ச்சைக் கருத்தை கூறி சிக்கலில் சிக்குவதை வாடிக்கையாகவே வைத்துள்ளனர்.
 
சமீபத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தது பிரதமர் வாஜ்பாய் எனக் கூறி சிக்கலில் சிக்கினார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம்  ஒட்டன்சத்திரத்தில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்  மற்றவர்களைக் குறை சொல்லியே எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்ததவர் தான் எம்.ஜி.ஆர் என கூறினார். எம்.ஜி.ஆரை விமர்சித்து சேம் சைட் கோல் போட்டது கூட்டத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
 
அடுத்ததாக மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்த தமிழக பட்ஜெட்டில் 28 லட்சம் ஒதுக்கீடு செய்திருப்பதாக கூறினார். உண்மையில் பட்ஜெட்டில் 28 ஆயிரத்து 757 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் தெரியாமல் இந்த புள்ளிவிவரத்தை உளறிக்கொட்டிவிட்டார்.  அமைச்சரின் இந்த பேச்சை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments