Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைச்சர், எம்.பி இடையே சண்டை... கலெக்டரை தள்ளி விட்டதால் பரபரப்பு

Webdunia
ஞாயிறு, 18 ஜூன் 2023 (07:33 IST)
தனியார் பள்ளி ஒன்றில் நடந்த விழாவில் அமைச்சர் மற்றும் எம்பி மோதலுக்கு இடையில் கலெக்டரை தள்ளிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து கலெக்டர் தலைமைச் செயலாளரிடம் புகார் அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
 
ராமநாதபுரம் அருகே தனியார் பள்ளி ஒன்றில் அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் எம்பி நவாஸ் கனி ஆகியோர் கலந்து கொள்ளும் விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 
 
முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கும் இந்த விழாவில் நவாஸ் கனி எம்பி தாமதமாக வந்ததாக தெரிகிறது. ஆனால் அதற்கு முன்னரே விழா தொடங்கப்பட்டு விட்டதால் மாவட்ட ஆட்சியரிடம் நவாஸ் கனி எம்பி கேள்வி எழுப்பினார். 
அப்போது அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் நவாஸ் கனி எம்பி இடையே காட்டும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் இந்த வாக்குவாதத்தின் இடையே மாவட்ட ஆட்சியர் தள்ளிவிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 
 
இது குறித்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் தலைமை செயலாளரிடம் புகார் அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செல்போன் சார்ஜ் போட்டபோது ஷாக்.. சென்னை பள்ளி மாணவி பரிதாப பலி..!

சிறையில் தீட்டப்பட்ட சதி.. தடுக்க முடியாமல் குறட்டை விட்டு தூங்கும் திமுக அரசு.. அன்புமணி

எந்த தமிழனும் தமிழ்நாட்டை உருவாக்கல.. RSS தேசபக்தர்களை உருவாக்கியது! - மகாராஷ்டிர ஆளுநர் சர்ச்சை பேச்சு!

அரசு பள்ளிகளில் அடுத்த ஆண்டு முதல் ஏஐ பாடத்திட்டம்: பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்

கருணாநிதி வைத்திருந்த அரசு ஊழியர் ஓட்டு வங்கியை ஸ்டாலின் இழந்து விட்டார் : ஆசிரியர் கூட்டமைப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments