Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதுகலை, இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவது எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

Siva
திங்கள், 1 ஜூலை 2024 (08:07 IST)
தமிழகத்தில் காலியாக உள்ள முதுகலை மற்றும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் தற்போது இது குறித்து அறிவிப்பை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை முன்னிட்டு அமைச்சர் அன்பில் மகேஷ் பிரச்சாரம் செய்த நிலையில் அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழகம் முழுவதும் முதுநிலை, இடைநிலை ஆசிரியர் பணிகளில் சேர்வதற்கு 2022 ஒந்நெ டிஆர்பி தேர்வு எழுதி காத்திருக்கிறார்கள் என்றும் இந்த மாத இறுதிக்குள் அந்த தேர்வு முடிவுகள் வெளியாகி காலியிடங்கள் நிரப்பப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சரின் இந்த அறிவிப்பு தேர்வு எழுதிய தேர்வர்கள் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அது மட்டும் இன்றி போதுமான ஆசிரியர்கள் இல்லாததால் பள்ளியில் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதை அடுத்து உடனடியாக காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக ஆட்சியில் கஞ்சா வியாபாரிகள் சுதந்திரமாக செயல்படுகின்றனர்.. ஈபிஎஸ்

2026ல் திமுக, தவெக இடையேதான் போட்டி: விஜய் பேச்சுக்கு அதிமுக தலைவர்களின் ரியாக்சன்..!

செல்வப்பெருந்தகையின் மாபெரும் ஊழல்.. திமுக அரசும் உடந்தையா? அண்ணாமலை கேள்வி..!

2026ல் விஜய்தான் முதலமைச்சர் என உலகத்துக்கே தெரியும்: புஸ்ஸி ஆனந்த் பேச்சு

3 நாளில் 3 லட்ச ரூபாய் பிச்சை எடுத்து சம்பாதித்தவர் கைது.. அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments