அரசு பொதுத்தேர்வுக்கான அட்டவணை எப்போது? அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி

Webdunia
செவ்வாய், 14 நவம்பர் 2023 (14:56 IST)
அரசு பொதுத்தேர்வுக்கான அட்டவணை எப்போது? என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி அளித்துள்ளார்.
 
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்றும், ஆனால் அதே சமயம் பொதுத்தேர்வு நடைபெறுவதற்குள் பாடங்களை முடிக்க வேண்டிய சூழல் இருப்பதால் அதற்கு மாற்று வழிகளை ஆலோசித்து வருகிறோம் என்றும் அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டியில் கூறினார்.
 
அந்த வகையில் மழைக்காலம் முடிந்த பிறகு சனிக்கிழமைகளில் பள்ளிகளை இயக்க உள்ளோம் என்றும், அரசு பொதுத்தேர்வுக்கான அட்டவணை குறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்றும் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார்.
 
 பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் மாதமும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் மாதமும்  பொது தேர்வு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில்  அந்த சமயத்தில் தான்  நாடாளுமன்ற தேர்தலும் வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments