Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் என்ன குறிப்பிடப்பட்டிருக்கும்: அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

Webdunia
திங்கள், 14 ஜூன் 2021 (12:50 IST)
10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து என சமீபத்தில் தமிழக அரசு அறிவித்து இருந்தது என்பது தெரிந்ததே இந்த நிலையில் 10ம் வகுப்பு மதிப்பெண் பட்டியலில் 5 பாடங்களுக்கு தனித்தனியாக மதிப்பெண் பதிவு செய்வதற்கு பதிலாக மொத்தத்தில் ஆல்பாஸ் தேர்ச்சி என்று மட்டும் பதிவு செய்யப்பட்டிருக்கும் என்றும் இதற்கான மாதிரி மதிப்பெண் சான்றிதழ் அரசுக்கு பள்ளி கல்வித்துறை அனுப்பியுள்ளதாகவும் அரசின் அனுமதி பெற்றவுடன், மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் விநியோகம் செய்யப்படும் என்றும் கூறப்பட்டது
 
இந்த நிலையில் சற்று முன் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் ஆல் பாஸ் தேர்ச்சி என்று மட்டும் குறிப்பிடப்பட்டு வழங்க உள்ளோம் என்பதை உறுதி செய்துள்ளார். மேலும் இப்போதைக்கு ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பதினோராம் வகுப்பு சேர்க்கை நடைபெற்று வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
இதனை அடுத்து பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் ஆல்பாஸ் தேர்ச்சி என்று மட்டும் தான் குறிப்பிடப்பட்டிருக்கும் என்பது உறுதியாகி உள்ளது. ஆனால் அதே நேரத்தில் பின்னாளில் மாணவர்கள் பத்தாம் வகுப்பை அடிப்படையாக கொண்டு பணிக்கு சேரும்போது இந்த மதிப்பெண் சான்றிதழால் சிக்கல் ஏற்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி வீட்டில் தீ விபத்து.. கத்தை கத்தையாய் ரூபாய் நோட்டுக்களை பார்த்த தீயணைப்பு வீரர்கள்..!

சம்பளம் குறைக்கப்பட்டதால் அதிருப்தி.. பேருந்துக்கு தீ வைத்த டிரைவர்.. 4 பேர் பரிதாப பலி..!

விஜய்க்கு எதிராக கமல்ஹாசனை களமிறக்க திமுக திட்டமா? நாளை முக்கிய அறிவிப்பு..!

அஸ்வின் வீடு இருக்கும் சாலைக்கு அவரது பெயர்: சென்னை மாநகராட்சி முடிவு..!

அக்பர், சிவாஜியால் கூட தமிழ்நாட்டை வெல்ல முடியவில்லை: அமைச்சர் தங்கம் தென்னரசு

அடுத்த கட்டுரையில்
Show comments