Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கரும்பு நடுவதற்கு மினி கிட்டாச்சி – கரூர் புகளூர் ஈ.ஐ.டி. பாரி சர்க்கரை ஆலை நிர்வாகம் அசத்தல்

Webdunia
திங்கள், 13 ஜூன் 2022 (23:47 IST)
கரும்பு நடுவதற்கு மினி கிட்டாச்சி – கரூர் புகளூர் ஈ.ஐ.டி. பாரி சர்க்கரை ஆலை நிர்வாகம் அசத்தல் - இனி கரும்பு நடுவதற்கு ஆட்கள் தேவையில்லை மினி கிட்டாச்சியின் மூலம் கரும்பு நடவு செய்யும் கரும்பு விவசாயிக்கு கரூரில் குவியும் பாராட்டு.
 
கரூர் ஈ.ஐ.டி. பாரி சர்க்கரை ஆலையின் ஒரு முழு முயற்சியில் விவசாயி ஒருவரின் வாய்க்கால் பாசன தோட்ட்த்தில் மினி கிட்டாச்சி மூலம் கரும்பு கிடங்கு தோன்றி அதிலேயே நடும் பணி
 
தமிழகத்தில் உள்ள பல்வேறு கிராமத்தில் பல்வேறு விவசாயிகள் கரும்பு விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் சமீப காலமாகவே, விவசாயத்தில் ஆட்கள் பற்றாக்குறை, விவசாய பொருட்களுக்கு கட்டுப்படியான விலை இல்லை, இப்படி பல்வேறு வகையில் விவசாயிகளுக்கு அவர்கள் விளைவிக்கும் விவசாய பொருட்களினால் நஷ்டம் ஏற்படுகின்றது. விவசாயம் என்பது ஒரு நேரத்தில் நல்ல விலை கிடைக்கும், ஒரு நேரத்தில் நல்ல விலை கிடைக்காது என்ற நிலையில், விவசாயிகள் மிகவும் விரக்தியில் உள்ள நிலையில், அப்படிபட்ட நிலையில், கரூர் அருகே விவசாயி ஒருவர், மினி கிட்டாச்சி மூலம், கரும்பு கிடங்குகளை வெட்டி விதைக்கரணைகளை நடவு செய்து மற்ற விவசாயிகளிடம் ஒரு முன்மாதிரி விவசாயியாக திகழ்கின்றார்.
 
கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், வாங்கல் கிராமத்தினை சார்ந்தவர் விஸ்வநாதன், முன்னாள் கூட்டுறவு செயலாளரும், முன்மாதிரி விவசாயியுமான இவர், ஒரு ஏக்கருக்கு கரும்பு கிடங்கு வெட்ட, ஒரு வாரம் ஆகும் நிலையில், மினி கிட்டாச்சி மூலம் 16 மணி நேரத்தில் கரும்பு கிடங்கு வெட்டுகின்றார். குறித்த நேரத்தில் பணி முடிவடையும் என்ற திருப்தி ஒரு புறம், விவசாயப்பணியில் மற்ற கூலி ஆட்களை எதிர்பார்க்க முடியாத நிலை இனி வராது மற்றொரு புறம் என்றும், கிடங்கு வெட்டும் செலவும் குறைகின்றது. இதுமட்டுமில்லாமல்., ஒரே மாதிரியான ஆழம் மற்றும் அளவு என்று வெட்டப்படுகின்றது. இதுமட்டுமில்லாமல், கிட்டாச்சியின் எடை 1 டன் மட்டுமே என்பதினால் மண் இறுகுதல் என்பதும் கரும்பு தோட்டத்தில் தவிர்க்கப்படும்., 1 ஏக்கருக்கு 16 மணி நேரம் என்கின்ற விதத்தில் கரும்பு கிடங்கு வெட்டப்படும் நிலையில், உள் நஞ்சையில் கரும்பு தோட்டத்திற்கு, கரும்பு கிடங்கு வெட்டவும், கரும்பு கட்டி, தட்ட ரூ 20 ஆயிரம் செலவு ஆன நிலையில், இந்த மினி கிட்டாச்சியில் வெறும் ரூ 14 ஆயிரம் மட்டுமே செலவு என்கின்றனர் இ.ஐ.டி பாரி சர்க்கரை ஆலை நிர்வாகத்தினர். இதுமட்டுமில்லாமல், இவரது தோட்டத்திலேயே அப்பகுதியின் சுற்றுவட்டார பகுதிகளை சார்ந்த கரும்பு விவசாயிகளுக்கும் சோதனை முறையில் வாய்க்கால் பாசனத்தில் உள்ள உள் நஞ்சையில் கரும்பு கிடங்கு வெட்டுவது என்று மற்ற விவசாயிகளுக்கும் செயல்விளக்கமும் செய்து காட்டப்பட்டது. புகளூர் ஈ.ஐ.டி. பாரி சர்க்கரை ஆலையின் பொதுமேலாளர் கரும்பு அவர்களின் அறிவுறுத்தலின் படி, நடைபெற்றன் இந்நிகழ்ச்சியில் கரும்பு மேலாளர் காந்திமதி தலைமை வகித்தார்.  இதற்கான முழு ஏற்பாடுகளை கரும்பு கோட்ட அலுவலர் சத்தியமூர்த்தி சிறப்பாக செய்திருந்தார், மேலும், கரும்பு ஆய்வாளர் சக்திவேல், வாங்கல், குப்புச்சிப்பாளையம், நன்னியூர், நெரூர் வடபாகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சார்ந்த விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி, அமித்ஷாவை மனைவியுடன் சென்று சந்தித்த ஹேமந்த் சோரன்... என்ன காரணம்?

ஐதராபாத் தெருவில் திடீரென ஓடிய ரத்த ஆறு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

இன்று 75வது அரசியலமைப்பு தினம்.. கமல்ஹாசன் அறிக்கை..!

வங்கதேசத்தில் இந்துமத தலைவர் கைது.. நாட்டை விட்டு வெளியேற தடை..!

கனமழை எதிரொலி: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments