Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை முதல் பால் விலை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்வு.. அதிர்ச்சியில் தமிழக மக்கள்..!

Siva
வெள்ளி, 31 ஜனவரி 2025 (12:48 IST)
நாளை முதல் தனியார் பால் நிறுவனம் லிட்டருக்கு இரண்டு ரூபாய் விலையை உயர்த்தப் போவதாக அறிவித்துள்ளது பொது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை முதல் தென் மாவட்டங்கள் வரை பால் விற்பனையில் ஈடுபட்டு வரும் ஆந்திராவைச் சேர்ந்த தனியார் பால் உற்பத்தி நிறுவனம் திருமலா, நாளை முதல் அதாவது பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் பால் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.

அதேபோல் மற்றொரு தனியார் நிறுவனமான ஜெர்சி பிப்ரவரி 3ஆம் தேதி முதல் பால் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இந்த நிறுவனங்கள் பால் விலையை ஒரு லிட்டருக்கு இரண்டு ரூபாயும் தயிர் விலையை லிட்டருக்கு ஐந்து ரூபாயும் உயர்த்த உள்ளது. விலை உயர்வு குறித்த முழு விவரங்கள் இதோ:

நிறை கொழுப்பு பால் 1 லிட்டர் பாக்கெட் 70 ரூபாயில் இருந்து 72 ரூபாயாகவும், 500 மி.லி. பாக்கெட் 36 ரூபாயில் இருந்து 37 ரூபாயாகவும், நிலைப்படுத்தப்பட்ட பால் 1 லிட்டர் பாக்கெட் 62 ரூபாயில் இருந்து 64 ரூபாயாகவும், 500 மி.லி. பாக்கெட் 32 ரூபாயில் இருந்து 33 ரூபாயாகவும், சமன்படுத்தப்பட்ட பால் 1 லிட்டர் பால் 1 லிட்டர் பாக்கெட் 61 ரூபாயில் இருந்து 62 ரூபாயாகவும், 500 மி.லி. பால் பாக்கெட் 27 ரூபாயில் இருந்து 28 ரூபாயாகவும் உயருகிறது.

அதேபோல் தனியார் நிறுவன தயிர் 1 கிலோ பாக்கெட் 67 ரூபாயில் இருந்து 72 ரூபாயாகவும், 450 கிராம் தயிர் பாக்கெட் 33 ரூபாயில் இருந்து 37 ரூபாயாகவும் உயருகிறது.  

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எக்கச்சக்க வரி! இது தாங்காது! வியட்நாமில் இருந்து இந்தியாவுக்கு ஜம்ப் அடிக்கும் சாம்சங்!

பஹல்காம் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளின் வீடுகள் குண்டு வைத்து அழிப்பு.. இந்திய ராணுவம் அதிரடி..!

குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு தேதி எப்போது? டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு!

இருட்டுக்கடை யாருக்கு சொந்தமானது? குடும்பத்தில் எழுந்த பங்காளி தகராறு!?

காஷ்மீருக்கு அமெரிக்கர்கள் சுற்றுலா செல்ல வேண்டாம்: அமெரிக்க வெளியுறவுத்துறை..!

அடுத்த கட்டுரையில்
Show comments