Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கக்கடலில் உருவானது புயல்: புயலின் பெயர் இதுதான்..!

Webdunia
செவ்வாய், 28 நவம்பர் 2023 (08:09 IST)
தென்மேற்கு வங்கக்கடலில்  காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகி இருக்கும் நிலையில் இது நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகும் என்றும் அதன் பிறகு புயலாக மாற வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில்  வங்க கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மையம் தற்போது புயலாக மாற அதிக வாய்ப்பு இருப்பதாகவும் இந்த புயலுக்கு மிக்ஜாம் என்ற பெயர் சூட்டப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

வங்க கடலில் தோன்றும் இந்த புயல் தமிழ்நாட்டின் ஊடாக செல்வதால் வட தமிழகம் மற்றும் ஆந்திரா எல்லை மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

இந்த புயலுக்கு மியான்மர் நாடு பரிந்துரை செய்த மிக்ஜாம் என்ற பெயர் சூட்டப்படும் என்றும் இந்த புயல் தமிழகத்தை நோக்கி வருமா அல்லது ஆந்திரா மற்றும் வட மாநிலங்களை நோக்கி செல்லுமா என்பது இன்னும் இரண்டு நாளில் துல்லியமாக தெரிந்துவிடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது



Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சத்குருவிற்கு ‘குளோபல் இந்தியன் விருது’! கனடா இந்தியா அறக்கட்டளை வழங்கியது!

குடும்பத்துக்காக தமிழக மானத்தை பாஜகவிடம் அடகு வெச்சிட்டாங்க! - திமுகவை விமர்சித்த தவெக விஜய்!

நாளை தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், ஆரஞ்சு அலெர்ட்! - எந்தெந்த மாவட்டங்களில்?

தாஜ் மஹாலை RDX வைத்து வெடிக்கப்போவதாக மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பு..!

மழை எச்சரிக்கையை மீறி சுற்றுலா! மரம் விழுந்து சிறுவன் பரிதாப பலி! - ஊட்டியில் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments