Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எம்.ஜி.ஆர் உறவினர் விஜயன் கொலை வழக்கு: 7 பேருக்கு ஆயுள் தண்டனை

Webdunia
புதன், 13 ஜூலை 2016 (16:57 IST)
மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்-இன் வளர்ப்பு மகள் சுதாவின் கணவர் விஜயன் கொலை வழக்கில் இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அதிரடியாக 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.


 
 
கடந்த 2008-ஆம் ஆண்டு காரில் சுதாவும் அவரது கணவர் விஜயனும் சென்று கொண்டிருந்தபோது, சிலர் வழிமறித்து இரும்புக் கம்பியால் அடித்து கொலை செய்தனர். சுதாவின் தங்கை பானு சொத்துப் பிரச்சனை காரணமாக கூலிப்படையை வைத்து கொலை செய்ததாக இந்த வழக்கை விசாரித்த சிபிசிஐடி கண்டுபிடித்தது.
 
7 ஆண்டுகளாக நீடித்து வந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் விஜயன் மனைவியின் தங்கை பானு, கூலிப்படையை நியமித்த காவலர் கருணா மற்றும் கூலிப்படையை சேர்ந்த சுரேஷ், கார்த்தி உள்பட ஏழு பேரையும் குற்றவாளிகள் என்று தீர்பளித்துள்ளனர்.
 
ஏழு பேருக்கும் ஆயுள் தண்டனை மற்றும்  10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். அபராதத்தை கட்டத் தவறினால் மேலும் 6 மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும்.
 
விஜயன் மனைவி சுதா இன்று நீதிமன்றத்திற்கு வந்து, கணவர் கொலை வழக்கில் 7 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதை வரவேற்பதாக கூறினார்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீண்ட இடைவெளிக்கு பின் இன்று மீண்டும் உயர்ந்த பங்குச்சந்தை.. என்ன நிலவரம்.!

கள்ளக்குறிச்சியில் திடீர் நில அதிர்வு.. பொதுமக்கள் அச்சம்!

நாக்கை அறுத்து சிவனுக்கு காணிக்கை செலுத்திய 11ஆம் வகுப்பு மாணவி.. அதிர்ச்சி சம்பவம்..!

5 கிலோ தக்காளி 100 ரூபாய்.. விலை சரிந்ததால் விவசாயிகள் வருத்தம்.!

7 வழக்குகளிலும் ஜாமீன்: விடுதலை ஆனார் ஸ்ரீரங்கம் ரங்கராஜன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments