Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேட்டுப்பாளையம் - போத்தனூர் மெமு ரயில் ரத்து.. ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு..!

Siva
ஞாயிறு, 2 பிப்ரவரி 2025 (10:17 IST)
பராமரிப்பு பணிகள் காரணமாக மேட்டுப்பாளையம் - போத்தனூர் மெமு ரயில் பிப்ரவரி 2, 4, 6 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
 
 சேலம் ரயில்வே கோட்ட பகுதியில் மாதாந்திர ரயில்வே பராமரிப்பு பணி மேற்கொள்ளவுள்ளதால் அப்பகுதியில் இயக்கப்படும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படவுள்ளது. 
 
அந்த வகையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து போத்தனூருக்கு காலை 8.20 மணிக்கும், போத்தனூரில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு காலை 9.40 மணிக்கும் இயக்கப்படும் மெமு ரயில் பிப்.2, 4, 6 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படும். 
 
மேலும், மேட்டுப்பாளையத்திலிருந்து கோவைக்கு காலை 10.55 மணிக்கும், மறுமாா்க்கமாக கோவையில் இருந்து காலை 11.50 மணிக்கு இயக்கப்படும் மெமு ரயில் பிப்.4, 6 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படும்.
 
ஆலப்புழை-தன்பாத் விரைவு ரயில் (எண் 13352) பிப்.2, 4, 6, 18 ஆகிய தேதிகளில் கோவை வழியாக செல்வதற்கு பதிலாக போத்தனூா் வழியாக செல்லும். எா்ணாகுளம்-பெங்களூரு இன்டா்சிட்டி விரைவு ரயில் (எண் 12678) பிப்.2, 4, 6 ஆகிய தேதிகளில் கோவை வழியாக செல்வதற்கு பதிலாக போத்தனூா் வழியாக இயக்கப்படும். 
 
அதேபோல் திருச்சி-ஈரோடு பயணிகள் ரயில் (எண் 56809) மற்றும் செங்கோட்டை-ஈரோடு விரைவு ரயில் (எண் 16846) பிப்.1, 3, 6, 8, 10 ஆகிய தேதிகளில் கரூா் வரை மட்டும் இயக்கப்படும். மறுமாா்க்கமாக இயக்கப்படும் ஈரோடு-செங்கோட்டை விரைவு ரயில் பிப்.1,3, 6, 8, 10 ஆகிய தேதிகளில் கரூரிலிருந்து புறப்பட்டுச் செல்லும்
 
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நல்லக்கண்ணு தவறி விழுந்து காயம்.. தொலைபேசி வழியாக உடல்நிலையை விசாரித்த விஜய்..!

கொடைநாட்டிலே நின்றபோது மிஸஸ் ஜெயலலிதா என அழைத்திருப்பீர்களா? விஜய்க்கு சரத்குமார் கேள்வி..!

விஜயகாந்த் இடத்தை விஜய் நிரப்புவார்: தாடி பாலாஜி பேட்டி..!

2வது மனைவியின் பிரசவத்தின் போது முதல் மனைவியிடம் சிக்கிய நபர்! மனித வளத்துறையில் புகார்..!

பிரத்தியேக செயலியுடன் போலீசாருக்கு செல்போன்கள்: கோவை மாநகரக் காவல் துறை!

அடுத்த கட்டுரையில்
Show comments