Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னையில் புதிய வழி தடத்தில் இயங்க உள்ள மெட்ரோ ரயில்

புதிய வழித்தடத்தில் சென்னை மெட்ரோ ரயில்

சென்னையில் புதிய வழி தடத்தில் இயங்க உள்ள மெட்ரோ ரயில்
, வெள்ளி, 2 செப்டம்பர் 2016 (12:38 IST)
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரை 23.05 கிலோ மீட்டர் தூரத்துக்கு முதல் வழித்தடத்திலும், சென்டிரல் முதல் பரங்கிமலை வரை 22.50 கிலோ மீட்டர் தூரத்துக்கு 2-வது வழித்தடத்திலும் மெட்ரோ ரெயில் பணிகள் நடந்து வருகிறது.



கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு பறக்கும் பாதை அமைப்பதற்கான பணிகள் நிறைவடைந்து, மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இன்று தமிழக சட்டசபையில் பேசிய நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து  சின்னமலை வரையிலான மெட்ரோ ரயிலின் புதிய வழித்தடம் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துவிட்டது. எனவே அடுத்த மாதம் அந்த வழித்தடத்தில் மெட்ரோல் ரயில் இயக்கப்படும் என்று கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காதல் திருமணம்; ஆணவ கொலை செய்ய பஞ்சாயத்தில் முடிவு: திருச்சியில் பகீர்!