Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெட்ரோ ரயில் கட்டணம் அறிவிப்பு: கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் செல்ல ரூ.40

Webdunia
திங்கள், 29 ஜூன் 2015 (11:34 IST)
மெட்ரோ ரயில் கட்டண விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் செல்ல ரூ. 40 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 

 


மெட்ரோ ரயில் கட்டணம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு:–
 
மெட்ரோ ரயிலின் குறைந்தபட்ச கட்டணமாக 10 ரூபாயும் அதிகபட்ச கட்டணமாக 40 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆலந்தூரில் இருந்து ஈக்காட்டுத்தாங்கலுக்கு ரூ. 10 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


 

 
ஆலந்தூரில் இருந்து அசோக் நகருக்கு ரூ. 20, ஆலந்தூரில் இருந்து வடபழனிக்கு ரூ. 30, ஆலந்தூரில் இருந்து அரும்பாக்கம், சி.எம்.பி.டி, கோயம்பேடு ஆகிய இடங்களுக்கு  40 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். சிறப்பு வகுப்புக்கான கட்டணம் 2 மடங்கு ஆகும்.
 
ஆலந்தூரில் இருந்து கோயம்பேடுக்கு ஏ.சி.பஸ்சில் பயணம் செய்ய ரூ. 45 வசூலிக்கப்படுகிறது. மெட்ரோ ரயில் கட்டணம் அதை விட ரூ. 5 குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

இது என்ன டிசம்பர் மாதமா? அதிகனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

என் நெஞ்சில் எட்டி உதைத்தார்.. ஆம் ஆத்மி பெண் எம்.பி. ஸ்வாதி மாலிவால் புகாரில் அதிர்ச்சி தகவல்..!

திருவண்ணாமலைக்கு மட்டும் கோயம்பேட்டிலிருந்து கூடுதல் பேருந்து வசதி! – புதிய அறிவிப்பு!

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

Show comments