Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் இன்று வெளுக்கப் போகும் மழை.. வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை..!

Siva
செவ்வாய், 2 ஜூலை 2024 (08:35 IST)
சென்னையில் இன்று மிதமான மழை முதல் கனமழை வரை வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்றும் நாளையும் தமிழகத்தில் மிதமான மழை பெய்யும் என்றும் ஜூலை 4ஆம் தேதி முதல் 7ஆம் தேதி முதல் தமிழகத்தின் சில இடங்களில் மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மாலை அல்லது இரவு நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருந்தாலும் பகல் நேரத்தில் இன்று அதிகபட்ச வெப்பநிலை 95 டிகிரி பாரன்ஹீட் வரை இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னையில் கடந்த சில நாட்களாக மீண்டும் தட்பவெப்ப நிலை மோசமாக இருக்கும் நிலையில் மாலை அல்லது இரவு நேரத்தில் மழை பெய்தால் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நலத்திட்டங்களுக்கு கலைஞர் பெயர் வைக்காமல் கரப்பான்பூச்சி பெயரையா வைக்க முடியும்? - சீண்டிய உதயநிதி ஸ்டாலின்!

மகாராஷ்டிராவில் பாஜகவே எதிர்பாராத ஒரு வெற்றி கிடைத்துள்ளது.. திருமாவளவன்

பொங்கல் அன்று சி.ஏ பவுண்டேசன் தேர்வுகள்: தேதிகளை மாற்ற கடிதம் எழுதிய சு வெங்கடேசன் எம்பி..!

இன்று முதல் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில் சேவையில் மாற்றம்..!

வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி.. 2 நாட்களில் தமிழகம் நோக்கி..! 4 நாட்களுக்கு கனமழை!

அடுத்த கட்டுரையில்
Show comments