அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Siva
புதன், 7 ஆகஸ்ட் 2024 (08:00 IST)
தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பதும் குறிப்பாக நேற்று இரவு திடீரென சென்னையில் முக்கிய பகுதிகளில் பெய்த மழையால் சென்னை நகரமே குளிர்ச்சி அடைந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இன்னும் சில மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய மூன்று மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேபோல் சென்னை மற்றும் சுற்றுப்புறங்களிலும் இன்று மழை பெய்யும் என்றும் குறிப்பாக அடுத்த மூன்று மணி நேரத்திற்குள் திருவொற்றியூர் பகுதியில் மழை பெய்யும் என்றும் செங்கல்பட்டு, குன்றத்தூர், மதுரவாயல், ஸ்ரீபெரும்புதூர், திருப்போரூர், ஊத்துக்கோட்டை ஆகிய பகுதிகளிலும் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் ஆலந்தூர், புரசைவாக்கம், தண்டையார்பேட்டை, வேளச்சேரி, சோழிங்கநல்லூர், காஞ்சிபுரம் , கும்மிடிப்பூண்டி, வண்டலூர் பகுதிகளில் லேசான மழை முதல் மிதமான மழை  பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எந்த ஷா வந்தாலென்ன? கருப்பு சிவப்பு படை தக்க பாடம் புகட்டும்! முதல்வர் ஸ்டாலின்

ஆசைக்கு அளவில்லை என்பதற்கு அடையாளம் விஜய்”: த.வெ.க. தலைவரை விமர்சித்த அமைச்சர் கோவி. செழியன்

விஜய் போட்டாவ வச்சி என் பொண்ணு வாழ்க்கையே போச்சி!.. அட பாவமே!...

இட்லி, வடை, தோசை சாப்பிடுவது போன்ற ஒரு சாதாரண சந்திப்பு.. விஜய் சந்திப்பு குறித்து பிரவீன் சக்கரவர்த்தி

உபியில் 2.45 கோடி வாக்காளர் படிவங்கள் திரும்ப வரவில்லை.. SIRஆல் பாஜகவுக்கு சிக்கலா?

அடுத்த கட்டுரையில்
Show comments