Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென்னிந்தியாவில் பருவமழை எப்போது விலகும்! முக்கிய அப்டேட் கொடுத்த வானிலை மையம்.!

Senthil Velan
சனி, 13 ஜனவரி 2024 (16:15 IST)
வடகிழக்கு பருவமழை தென் இந்திய பகுதிகளிலிருந்து வருகின்ற ஜனவரி 15-ஆம் தேதி வாக்கில் விலகுவதற்கான வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், இலங்கை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கிழடுக்கு சுழற்சி நிலவுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது
 
இன்று தென் தமிழகம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழை  பெய்யக்கூடும் எனவும்  ஏனைய தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது 
 
நாளை தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் எனவும் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
15.01.2024  முதல் 19.01.2024 வரை தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
 
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான  வானிலை முன்னறிவிப்பு:
 
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.  நகரின்  ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.  அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும். 
 
மீனவர்களுக்கான எச்சரிக்கை:  
 
13.01.2024: குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில்  சூறாவளிக்காற்று  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று சென்னை வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிச்சைக்காரர்களுக்கு பிச்சை போடுபவர்கள் மீது வழக்குப்பதிவு: ஜனவரி 1 முதல் அமல்..!

இளையராஜா ஒரு இசை கடவுள்,, கடவுளுக்கு கோயிலுக்கு போகணும்னு அவசியமே இல்லை: கஸ்தூரி

ஆகமம் என்பது மனிதர்களால் உருவாக்கப்பட்டது.. இளையராஜா விவகாரம் குறித்து ஆன்மீக பேச்சாளர்..

நான் சுயமரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல... ஆண்டாள் கோவில் சம்பவம் குறித்து இளையராஜா

ஆரஞ்சு அலர்ட் மட்டுமின்றி ஆப்பிள் அலர்ட்டுக்கும் செம்பரம்பாக்கம் ஏரி தாங்கும்: அமைச்சர் துரைமுருகன்

அடுத்த கட்டுரையில்
Show comments