Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுமியை ஆசைகாட்டி மோசம் செய்த இளைஞர்கள் – போக்ஸோ சட்டத்தில் கைது !

Webdunia
திங்கள், 2 மார்ச் 2020 (11:35 IST)
சென்னையில் உறவினர்கள் வீட்டில் தங்கியிருந்த சிறுமியை ஆசைகாட்டி அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவரை அவரது தாய் தனியாக விட்டுவிட்டு சென்றுவிட்டார். வேறு யாரும் இல்லாத அந்த சிறுமி சென்னையில் உள்ள உறவினர்கள் அடைக்கலம் அடைந்து வாழ்ந்து வருகிறார். அப்போது அந்த வீட்டுக்கு தண்ணீர் கேன் போட வரும் சதீஷ்குமார் என்பவர் அந்த சிறுமியோடு நட்பாகப் பழகியுள்ளார். அவரை நம்பி அந்த சிறுமியும் பழகியுள்ளார். இந்நிலையில் அவரை திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொல்லி வீட்டை விட்டு அழைத்துச் சென்றுள்ளார்.

அவரை அழைத்துச் சென்று நீலாங்கரையில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். தான் மட்டுமில்லாமல் தனது நண்பர்களான வினோத் மற்றும் ராஜா ஆகியோருடன் சேர்ந்து இரண்டு வார காலமாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதையடுத்து உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் அவர்களை கண்டுபிடித்த போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2 முறை முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்.. திமுகவில் இணைகிறாரா?

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

அடுத்த கட்டுரையில்