Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆட்சியை கலைத்து தேர்தல் நடத்துங்கள்: சமூக வலைதளங்களில் கொதிக்கும் மக்கள்

Webdunia
செவ்வாய், 3 ஜனவரி 2017 (15:07 IST)
ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுகவின் பொதுச் செயலாளர் பொறுப்பேற்றுக் கொண்ட சசிகலா அடுத்து தமிழக முதல்வராக வேண்டும் என்று துணை சபாநாயகர் தம்பிதுரை வலியுறுத்தியுள்ளார். சசிகலாதான் அடுத்த தமிழக முதல்வர் என்ற நிலையில் மக்கள் சமூக வலைதளங்களில் சசிகலா எதிராக தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.


 

 
ஜெயலலிதா மறைவுக்கு பின் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். ஜெயலலிதா இல்லாத போது இரண்டு முறை பன்னீர்செல்வம் தான் தமிழக முதல்வராக பொறுப்பேற்றார். இது ஜெயலலிதாவின் முடிவு என்பதால், ஜெயலலிதா மறைந்த பிறகு பன்னீர்செல்வம் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டத்தில் மக்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.
 
இதைத்தொடர்ந்து சசிகலா அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவி பொறுப்பை ஏற்க வேண்டும் என்று அதிமுக நிர்வாகிகள் வலியுறுத்தினர். அதன்பின்னர் அனைவரின் கோரிக்கையை ஏற்று சசிகலா அதிமுகவின் பொதுச் செயலாலர் பதவியை ஏற்றுக்கொண்டார். இந்நிலையில் அடுத்து சசிகலா தமிழக முதல்வராக வேண்டும் துணை சபாநாயகர் தம்பிதுரை வலியுறுத்தியுள்ளார்.
 
மீண்டும் முதலில் இருந்து தொடங்கிறது. அதிமுக பொதுச் செயலாலர் அடுத்து தமிழக முதல்வர். அதிமுக நிர்வாகிகள் வலியுறுத்தல், சசிகலா பொறுப்பு ஏற்றுக்கொள்வது, இதுதான் நடந்தது. இதுதான் நடக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்துவிட்டது.
 
இதனால் தற்போது சமூக வலைதளங்களில் மக்கள் சசிகலாவுக்கு எதிராக மீம்ஸ் மற்றும் பதிவுகள் போட்டு அசத்தி வருகின்றனர். சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சசிகலா தமிழக முதல்வரா? சசிகலா ஜெயலலிதா இடத்தில் எப்படி? என்ற பல்வேறு பதிவுகள் உலா வருகின்றது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

இந்தியாவுக்கு போட்டியாக தூது குழுவை அனுப்பும் பாகிஸ்தான்… பிலாவல் பூட்டோ தான் தலைமை!

அடுத்த கட்டுரையில்
Show comments