கிளப்புகளுக்கு வெளியில் இனி மது எடுத்து செல்லலாம் – எவ்ளோ தெரியுமா ?

Webdunia
வியாழன், 3 அக்டோபர் 2019 (07:38 IST)
தமிழகத்தில் உள்ள தனியார் கிளப்புகளுக்கு இனி மது வகைகளை எடுத்து செல்லலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட கிளப்புகளுக்கு செல்லும் அதன் உறுப்பினர்கள் வெளியில் இருந்து மது வகைகளை எடுத்து செல்லக் கூடாது என கடந்த 2010 ஆம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இந்த தடையை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் அந்த தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் கிளப் உறுப்பினர்கள் எந்தெந்த மது வகைகளை எவ்வளவு கொண்டு செல்லலாம் எனவும் வரையறுத்துள்ளது. அதன்படி இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுவகைகள் மற்றும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட மதுவகைகள் ஆகியவற்றை 4.5 லிட்டரும் பீர் வகைகள் என்றால்  7.8 லிட்டரும் வொயின் வகைகள் என்றால் 9 லிட்டரும் எடுத்து செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவின் ஆதார் கார்டு போலவே இங்கிலாந்து ‘பிரிட் கார்டு’.. பிரதமர் ஸ்டார்மர் திட்டம்.!

வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது: தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு..!

திடீரென தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. வெள்ளியும் திடீரென ரூ.13000 குறைந்ததால் பரபரப்பு..!

ஒரே சமயத்தில் இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள்.. கனமழை எச்சரிக்கை..!

பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் போரை நிறுத்துவது எல்லாம் எனக்கு ஒரு நிமிட வேலை: டிரம்ப்

அடுத்த கட்டுரையில்
Show comments