Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள் கூட்டம் - முக்கிய முடிவு எடுக்கப்படுமா?

Webdunia
திங்கள், 28 ஆகஸ்ட் 2017 (09:27 IST)
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவகத்தில் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் இன்று காலை நடைபெறவுள்ளது.


 

 
அதிமுகவின் உள்ள உட்கட்சி பிரச்சனைகள் பரபரப்பையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைமை அலுவகத்தில் இன்று அதிமுக எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்குபெறும் ஆலோசனைக் கூட்டம் இன்று காலை நடைபெறுகிறது.
 
இந்த கூட்டத்திற்கு அவைத்தலைவர் மதுசூதனன் தலைமை தாங்குகிறார். முதல்வர் எடப்படி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், துணை சபாநாயகர் தம்பிதுரை உள்ளிட்ட அனைவரும் இதில் கலந்து கொள்கின்றனர். 
 
இந்த கூட்டத்தில் அதிமுகவின் பொதுக்குழுவை எப்போது கூட்டுவது என்பது பற்றி முடிவெடுக்கப்படும் எனத் தெரிகிறது. ஏனெனில், ஓ.பி.எஸ்-ஸும், எடப்பாடி அணியுடன் சமீபத்தில் இணைந்த போது, அதிமுகவின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட சசிகலா அப்பதவியில் இருந்து விரைவில் நீக்கப்படுவார். அதிமுகவின் பொதுக்குழு விரைவில் கூட்டப்பட்டு அதுபற்றி அறிவிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியலிங்கம் ஏற்கனவே அறிவித்திருந்தார். 


 

 
எனவே, பொதுக்குழு கூடுவதற்கான தேதி இன்று அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது. அநேகமாக, செப்டம்பர் 2 அல்லது 3வது வாரத்தில் பொதுக்குழு கூட்டப்படும் எனத் தெரிகிறது. 
.
அதோடு, டிடிவி தினகரன் நியமித்த நிர்வாகிகளின் நியமனம் தொண்டர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அவரின் நியமனங்கள் செல்லாது என இன்று அறிவிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தொழில் அதிபர், ரியல் எஸ்டேட் அதிபர், முன்னாள் அதிகாரி.. சென்னையில் திடீரென சிபிஐ அதிகாரிகள் சோதனை..

சாக்குப்பையில் இளம்பெண்ணின் பிணம்.. விரைவுச்சாலையில் தூக்கி வீசப்பட்டதா?

கனமழை எச்சரிக்கை எதிரொலி: முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை..!

வங்கக்கடலில் நாளை உருவாகிறது புயல்.. புயலுக்கு என்ன பெயர் தெரியுமா?3

போர் விமானம் தயாரிப்பவர்கள் முட்டாள்கள். எலான் மஸ்க் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments