Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீமானுடன் செல்பி எடுத்த மீரா மிதுன் – குவியும் நாம் தமிழரின் ஆதரவு !

Webdunia
ஞாயிறு, 19 ஜனவரி 2020 (17:00 IST)
பிரபல நடிகை மீரா மிதுன் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் எடுத்துக் கொண்ட செல்பி சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.

தமிழில் 8 தோட்டாக்கள் மற்றும் போதை ஏறி புத்தி மாறி ஆகிய படங்களில் நடித்தவர் மீரா மிதுன். பின்னர் பிக்பாஸ் சீசன் 3 –ல் கலந்துகொண்டு இயக்குனர் சேரனுடனான சர்ச்சை சண்டைகளால் பிரபலமானார்.

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினாலும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து தீவிரமாக இயங்கி ரசிகர்களோடு தொடர்பில் இருப்பவர். இந்நிலையில் இப்போது இவர் இயக்குனரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமானுடன் எடுத்துக் கொண்ட செல்பி புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவேற்றி உள்ளார்.

அதில் ‘தன்னுடைய பணிகளில் சிறந்தவராக இருப்பவரும், அரசியல் மற்றும் வாழ்க்கையில் பலருடைய பாராட்டுக்களை பெற்றவருமான சீமானுடனான இந்த சந்திப்பு எதிர்பாராதது. மிகவும் நேர்மறையான எண்ணம் கொண்ட மனிதர் சீமான்.’ எனக் கூறியுள்ளார். இந்த பதிவை நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள் பலரும் பகிர்ந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

உத்தர பிரதேசத்தில் புல்டோசர் போல் தமிழகத்தில் வரி வசூல்.. மக்கள் கொந்தளிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments