Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவனுக்கு ஊசி போட்ட மெடிக்கல் கடை உரிமையாளர். மாணவன் உயிரிழந்ததால் பரபரப்பு..!

Mahendran
வெள்ளி, 7 ஜூன் 2024 (12:46 IST)
எட்டாம் வகுப்பு மாணவனுக்கு உடல்நல குறைவு ஏற்பட்ட நிலையில் மெடிக்கல் கடை உரிமையாளர் மருந்து மாத்திரை கொடுத்து ஊசி போட்டுள்ள நிலையில் அந்த மாணவன் உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .
 
சேலம் மாவட்டம் ஆத்தூர் என்ற பகுதியைச் சேர்ந்த ஜெகதீஷ் மகன் கீர்த்திவாசன் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் நிலையில் திடீரென கீர்த்தி வாசனுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. 
 
இதனை அடுத்து அருகில் இருந்த மெடிக்கல் கடையில் மருந்து, மாத்திரை வாங்கி கொடுத்த நிலையில், மெடிக்கல் கடை நடத்தி வரும் செந்தில் குமார் என்பவர், கீர்த்தி வாசனுக்கு ஊசி போட்டதாகவும் தெரிகிறது. 
 
இந்த நிலையில் மீண்டும் மாணவனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கீர்த்தி வாசன் சிகிச்சையின் பலன் இன்றி உயிரிழந்தார். இது குறித்து காவல்துறையினர் விசாரித்து மெடிக்கல் கடை உரிமையாளர் செந்தில்குமாரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments