கருணாநிதி உடல்நிலை; மாலை 6 மணிக்கு வெளியாக உள்ள மருத்துவ அறிக்கை

Webdunia
திங்கள், 6 ஆகஸ்ட் 2018 (18:01 IST)
கருணாநிதி உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கை 4 நாட்கள் கழித்து மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 
திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை பாதிக்கப்பட்டு கடந்த 10 நாட்களாக காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இவரது உடல்நிலையில் எந்த ஏற்றமும் இல்லை, எந்த பின்னடைவும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
இன்று காலை திடீரென கருணாநிதி உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியானது. அதைத்தொடர்ந்து அவரது மனைவி தயாளு அம்மாள் மதியம் கருணாநிதியை பார்க்க காவேரி மருத்துவமனைக்கு வந்தார்.
 
இதனால் மீண்டும் பழைய படி சற்று நேரம் பதற்றம் ஏற்பட்டது. இந்த பதற்றத்திற்கு முக்கிய காரணம் காவேரி மருத்துவமனை சார்பில் கருணாநிதி உடல்நிலை குறித்து வெளியிடப்படும் மருத்துவ அறிக்கை வெளியாகி 4 நாட்கள் ஆகிவிட்டது. 
 
இந்நிலையில் தற்போது மாலை 6 மணிக்கு கருணாநிதி உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கை வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது. இதன் பின்னர் கருணாநிதி உடல்நிலை குறித்த தற்போதைய தெளிவாக தெரியவரும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

AI அனைத்து வேலைகளையும் செய்யும், இனிமேல் மனிதர்களுக்கு சுதந்திரம் தான்! எலான் மஸ்க்:

செம்பரப்பாக்கம் ஏரியை திறக்க என்னை ஏன் கூப்பிடவில்லை: செல்வப்பெருந்தகை ஆவேசம்..!

டெல்லி தாஜ் ஹோட்டலில் சர்ச்சை: 'பத்மாசனம்' போட்டு அமர்ந்த பெண்ணுக்கு அவமதிப்பு?

காலையில் குறைந்த தங்கம் மாலையில் மீண்டும் குறைவு.. இன்று ஒரே நாளில் ரூ.3680 சரிவு..!

இன்றிரவு சென்னை உள்பட 26 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments