Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிளீச்சிங் பவுடருக்கு பதில் சுண்ணாம்பு தெளிக்கப்பட்டதா? சென்னை மேயர் ப்ரியா விளக்கம்..!

Mahendran
வெள்ளி, 2 மே 2025 (11:19 IST)
சென்னையின் சில பகுதிகளில் ப்ளீச்சிங் பவுடருக்கு பதிலாக சுண்ணாம்பு தெளிக்கப்படுவதாக எழுந்த புகாருக்கு சென்னை மேயர் பிரியா விளக்கம் அளித்துள்ளார்.
 
சென்னை புளியந்தோப்பு பகுதியில், இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர் பாபு பங்கேற்க இருந்த நிகழ்ச்சிக்கு முன்பாக, அப்பகுதியில் ப்ளீச்சிங் பவுடருக்கு பதிலாக சுண்ணாம்பு தெளிக்கப்பட்டதாக புகார் எழுந்தது.
 
இதுகுறித்து, அந்த நிகழ்ச்சிக்கு வந்த மேயர் பிரியாவிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கும்போது, “சென்னை மாநகராட்சி கொள்முதல் செய்த ப்ளீச்சிங் பவுடரையே பயன்படுத்துகிறோம். புகார் குறித்தும், ப்ளீச்சிங் பவுடரின் தரம் குறித்தும் உரிய விசாரணை நடைபெறும்,” என தெரிவித்தார்.
 
ஏற்கனவே, சென்னையின் பல பகுதிகளில் ப்ளீச்சிங் பவுடருக்கு பதிலாக சுண்ணாம்பு தெளிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இதை முன்னிட்டு, மேயர் பிரியா உரிய நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிந்து நதியில் அணை கட்டினால் அதை இடிப்போம்.. பாகிஸ்தான் அமைச்சர்.. மத்திய அமைச்சர் பதிலடி..!

கத்தரி வெயிலை கண்டு பயப்பட வேண்டாம்.. நல்ல செய்தி சொன்ன வெதர்மேன்..!

தமிழகத்தில் சொத்து வரி மீண்டும் உயர்வா? அரசின் விளக்கம்..!

இந்தியா போர் தொடுத்தால் தக்க பதிலடி கொடுப்போம்: பாகிஸ்தான் ராணுவ தளபதிகள்..!

ஸ்கைப் சேவைக்கு விடை.. மே 5ல் நிறைவு பெறுகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments