Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை வந்தடைந்தார் மாயாவதி.. ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி

Siva
ஞாயிறு, 7 ஜூலை 2024 (10:44 IST)
பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி சென்னை வந்தடைந்தார் என்றும், அவர் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்தவுள்ளார் என்றும் சற்றுமுன் செய்தி வெளியானது.
 
உத்தரப் பிரதேசத்தில் இருந்து சிறப்பு விமானம் மூலமாக சென்னை வந்த மாயாவதி, சென்னை விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் பெரம்பூர் புறப்பட்டார். அவர் இன்று ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்தியவுடன் செய்தியாளர்களை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
முன்னதாக  பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரான ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து மாயாவது தனது வலைத்தளத்தில் கண்டனம் செய்திருந்தார். பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடின உழைப்பாளி என்றும், அர்ப்பணிப்புள்ள தலைவர் என்றும்,  ஆம்ஸ்ட்ராங்  படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தையும், சீற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்து இருந்தார். மேலும் இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாமல் தமிழக அரசு தடுக்க  கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்திருந்தார்.
 
இந்த நிலையில் இன்று சென்னை வந்துள்ள மாயாவதி ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கேரள பாஜக தலைவர் அறிவிப்பு.. தமிழக தலைவர் அறிவிப்பு எப்போது?

சென்னையில் வேல் யாத்திரை நடத்த அனுமதி இல்லை.. மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்..!

பஸ் ஓட்டிக்கொண்டே ஐபிஎல் மேட்ச் பார்த்த டிரைவர்.. டிஸ்மிஸ் செய்த நிர்வாகம்..!

சவுக்கு சங்கர் வீட்டுக்குள் புகுந்த ரவுடி கும்பல்? உதவிக்கு வராத போலீஸ்? - அண்ணாமலை கண்டனம்!

தி.நகர், ஆர்.கே.நகர் மேம்பாலங்கள் திறப்பது எப்போது? சென்னை மாநகராட்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments