Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமுருகன் காந்தி தேச துரோக வழக்கில் கைது

Webdunia
வியாழன், 9 ஆகஸ்ட் 2018 (13:28 IST)
மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தேச துரோக வழக்கில் பெங்களூர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

 
மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் வெளிநாடு சென்றார். ஜெர்மனி சென்ற திருமுருகன் காந்தி அங்கு ஈழத்தமிழர் நலன் தொடர்பான கூட்டத்தில் பங்கேற்று பேசினார். 
 
பின்னர் ஐ.நா. சபையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக பேசினார். பல்வேறு நாடுகளுக்கு சென்றுவிட்டு நார்வேயில் இருந்து விமானம் மூலம் இன்று அதிகாலை பெங்களூர் விமான நிலையம் வந்து சேர்ந்தார்.
 
அப்போது அவரை பெங்களூர் விமான நிலைய காவல்துறையினர் கைது செய்தனர். தமிழக காவல்துறையினர் திருமுருகன் காந்தியை சென்னை அழைத்து வந்த பிறகு அவரிடம் விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர்.
 
ஏற்கனவே குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பர்ட்டு விடுதலை ஆனார். பல வழக்குகள் அவர் மீது உள்ளது. அதை எல்லாம் சந்தித்து வருகிறார். இந்நிலையில் தற்போது தேச துரோக வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராக்கெட்டுகளை உருவாக்கும் மனிதர்களை உருவாக்கியவர் அப்துல் கலாம்! - ஈஷா இன்சைட் நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேச்சு!

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் தன்னைத் தானே சுட்டுக் கொண்ட மாணவர்: அதிர்ச்சி சம்பவம்..!

இன்றிரவு 4 மாவட்டங்களில் வெளுத்து கட்டப்போகும் மழை: வானிலை ஆய்வு மையம்..!

2025ஆம் ஆண்டில் எத்தனை நாள் விடுமுறை? தமிழக அரசு அறிவிப்பின் முழு விவரங்கள்..!

பெண் போலீஸை கணவரே வெட்டி கொலை செய்த கொடூரம்.. தந்தைக்கும் படுகாயம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments