Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தங்கம் வென்ற மாரியப்பன் உன்மையான தங்கம் என்பதை நிருபித்துவிட்டார்!

Advertiesment
தங்கப் பதக்கம்
, செவ்வாய், 13 செப்டம்பர் 2016 (10:31 IST)
பாராலிம்பிக்கில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்ந்துள்ளார்.


 


தங்கப் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு (21) சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டி அடுத்த பெரியவடகம்பட்டி என்ற குக்கிராமத்தைச் சேர்ந்தவர்.

இவரது தந்தை தங்கவேல் மற்றும் தாயார் சரோஜா, ஆகியோர், செங்கல் சூளை மற்றும் காய்கறி வியாபாரம் செய்து வருகின்றனர். தற்போது, மாரியப்பன் சேலம் தனியார் கல்லூரியில் பிபிஏ படித்து வருகிறார். இவருக்கு ஒரு சகோதரி, இரண்டு சகோதரர்கள் உள்ளனர். மாரியப்பன் ஐந்து வயது இருக்கும்போது, வீட்டின் அருகேயுள்ள கோயில் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த பேருந்து மோதியதில் அவரது வலது கால் கட்டை விரலை தவிர மற்ற கால் பகுதிகள் சிதைந்து, ஊனமானார்.

தங்கப் பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் 75 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்க இருக்கிறது. மேலும், தமிழக அரசு 2 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கியுள்ளது.  இந்நிலையில், அவர், தான் படித்த அரசு பள்ளிக் கூடத்தை மறக்காமல், அதற்கு 30 லட்சம் ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளார். இந்த செயலுக்கு அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வன்முறையை தூண்டிய கன்னட வெறியன் வாட்டாள் நாகராஜ் கைது!