Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமணங்கள் எப்படி நடக்கனும்? தமிழக அரசு அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 31 ஜூலை 2020 (14:30 IST)
திருமணங்கள் செய்வதற்கான நடைமுறைகள் குறித்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது தமிழக அரசு. 
 
கொரோனா பாதிப்பினால் இதுவரை 6 கட்ட ஊரடங்குகள் அமலில் உள்ள நிலையில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு இன்ரோடு (ஜூலை 31)  முடிவடைகிறது. இந்நிலையில் ஆகஸ்டு இறுதி வரை ஊரடங்கு தொடரும் என முதல்வர் பழனிச்சாமி நேற்று அறிவித்தார். கடந்த முறை அறிவிக்கப்பட்ட அதே தளர்வுகளும் கட்டுபாடுகளும் தான் இந்த முறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஆனால் திருமணங்கள் செய்வதற்கான நடைமுறைகள் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. எனவே, இதற்கு தற்போது பதில் அளித்துள்ளது தமிழக அரசு, திருமணங்களுக்கு ஏற்கனவே உள்ள நடைமுறை தொடரும். 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும். தனிமனித இடைவெளி அனைவரும் முக கவசம் அணிந்து இருக்க வேண்டும். 
 
மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வோர் கட்டாயம் இ பாஸ் பெற்றுவிட்டு தான் செல்ல வேண்டும், திருமண அழைப்பிதழில் பெயர் உள்ளவர்களுக்கு மட்டுமே இ பாஸ் வழங்கப்படும். விண்ணப்பிக்கும் போது சம்பந்தப்பட்ட கிராம் நிர்வாக அலுவலர் சான்றிதழ் இணைக்கப்பட்டால் மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்