சர்ச்சை கருத்து தெரிவித்த மாரிதாஸ் கைது! – டிசம்பர் 23 வரை சிறை தண்டனை!

Webdunia
வெள்ளி, 10 டிசம்பர் 2021 (09:34 IST)
பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியதாக கைது செய்யப்பட்ட மாரிதாஸ் சிறையில் அடைக்கப்பட்டார்.

மதுரை புதூர் சூர்யாநகர் பகுதியை சேர்ந்தவர் மாரிதாஸ். யூட்யூப் சேனல் ஒன்றை நடத்தி வரும் மாரிதாஸ் அவ்வபோது சர்ச்சையான கருத்துகளால் விமர்சிக்கப்பட்டும் வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் தமிழக அரசு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ட்விட்டரில் பதிவிட்டதாக மாரிதாஸ் மீது வழக்கறிஞர் ராமசுப்பிரமணியன் என்பவர் புகார் அளித்துள்ளார்.

அதன்பேரில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் மாரிதாஸை போலீஸார் கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அவரை டிசம்பர் 23 வரை சிறையில் அடைக்க மதுரை நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோவையில் இளம்பெண் கடத்தப்படவே இல்லையா? மாநகர காவல் ஆணையர் விளக்கம்..!

தேர்தலை திருடி பிரதமர் ஆனவர் மோடி.. இதை Gen Z இளைஞர்களுக்கு புரிய வைப்போம்: ராகுல் காந்தி

டெல்லியில் 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் கிளம்ப முடியாமல் தவிப்பு.. என்ன காரணம்?

பள்ளிகள், பேருந்து நிலையங்கள், மருத்துவமனைகளில் உள்ள தெருநாய்களை அகற்றுங்கள்: கோர்ட் உத்தரவு..!

அனைத்து அவலங்களுக்கும் அடிப்படை காரணம் இதுதான்: தமிழக அரசை விமர்சித்த சு வெங்கடேசன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments