Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனோரமாவின் உடலைப் பார்த்து தலையிலும் மார்பிலும் அடித்துக் கொண்டு கதறி அழும் பொதுமக்கள்

சுரேஷ் வெங்கடாசலம்
ஞாயிறு, 11 அக்டோபர் 2015 (09:58 IST)
மரணமடைந்த மனோரமாவின் உடலைப் பார்த்து பொதுமக்கள் தலையிலும் மார்பிலும் அடித்துக்கொண்டு கதறி அழும் காட்சி நெஞ்சை உருக்குவதாக உள்ளது.


 

 
நகைச்சுவை வேடம் மட்டுமின்றி, குணசித்திர வேடத்திலும் நடித்த, மனோரமா 1,500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார். உடல் நலக்குறைவு காரணமாக நேற்று இரவு 11 மணியளவில் அவர் உயிரிழந்தார்.
 
மரணமடைந்த மனோரமாவின், உடல் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. ஏராளமான பொதுமக்கள், ரசிகர்கள், திரைத்துறையினர், மற்றும் அரசியல் பிரமுகர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மனோரமாவின் உடலை பார்வையிட வந்த பெண்கள் பலர், கண்ணீர் மல்க அவரது உடலை பார்த்து கதறி அழுதபடி செல்கின்றனர்.
 
அவர்களுள் பலர், மனோரமாவை தங்கள் தாயைப் போல எண்ணி கதறி அழும் காட்சி நெஞ்சைப் பதறவைப்பதுடன் பார்ப்பவர்களின் துயரத்தை மேலும் அதிகரிக்கிறது.

இந்நிலையில், மனோரமாவின் உடலைப் பார்த்த ஒரு பெண், தலையிலும் மார்பிலும் அடித்துக் கொண்டு கதறி அழுதார். அப்போது ஒரு பெண்காவலர் அவரை கைத்தாங்கலாக அழைத்துச்  சென்றார்.
 
இதேபோல பல பெண்கள் மனோரமாவின் உடலைப் பார்த்து அடித்துக் கொண்டு கதறி அழுது வருகின்றனர். எல்லோரது மனதிலும் இடம்பிடித்த அவர் அந்த மனங்களில் துயரத்தை நிரப்பியபடி நீண்டு கிடக்கிறார்.


 

 
துன்பங்களாலும், துயரங்களாலும் உழலும் தங்களை குலுங்க குலுங்க சிரிக்கவைத்து தங்கள் துயரத்தை வெல்லும் சக்தியை கொடுத்த அன்புத்தாய் மனோராமா என்று எண்ணி ரசிகர்கள் கதறி அழுகின்றனர் போலும்...!

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

Show comments