அமைச்சர் கொடுத்த பணத்தை வாங்க மறுத்த மணிகண்டன் குடும்பத்தினர்!

Webdunia
வெள்ளி, 10 டிசம்பர் 2021 (08:54 IST)
அமைச்சர் கொடுத்த பணத்தை வாங்க மறுத்த மணிகண்டன் குடும்பத்தினர்!
சமீபத்தில் முதுகுளத்தூரில் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட மணிகண்டன் என்ற கல்லூரி மாணவர் மர்மமான முறையில் மரணமடைந்த நிலையில் அவருக்கு ஆறுதல் கூற வந்த அமைச்சர் மணிகண்டன் பெற்றோரிடம் பணத்தைக் கொடுத்தபோது அந்த பணத்தை அவர்கள் வாங்க மறுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
முதுகுளத்தூர் அருகே கல்லூரி மாணவன் மணிகண்டன் போலீசார் தாக்கியதாக இறந்ததாக குற்றம்சாட்டப்பட்டு இருக்கும் நிலையில் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அவர்கள் மணிகண்டன் வீட்டுக்கு சென்று அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்
 
மேலும் அவர் மணிகண்டனின் தந்தையிடம் பணத்தைக் கொடுத்தபோது அதனை ஏற்க மறுத்த மணிகண்டன் குடும்பத்தினர் தங்களுக்கு பணம் வேண்டாம் அரசு வேலைதான் வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது
 
அதன் பின்னர் அமைச்சர் தனது ஆதரவாளர்களுடன் பணத்தை வீட்டின் வாசலில் வைத்துவிட்டுச் சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது. தங்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை அவர்கள் வைத்த பணத்தை எடுக்க மாட்டோம் என மணிகண்டன் குடும்பத்தினர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எடப்பாடி ஒரு பெரிய தலைவர் இல்லை.. அவருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை: செங்கோட்டையன்

தொடர் கனமழை எதிரொலி.. மரம் விழுந்து பள்ளி சுவர் சேதம்.. OMR சாலையில் போக்குவரத்து நெரிசல்..

திமுக எங்களுக்கு எதிரி இல்லை!.. திடீர் டிவிஸ்ட் கொடுத்த ஆதவ் அர்ஜுனா!..

திடீரென சென்னையை நோக்கி நகரும் மேகக் கூட்டங்கள்! அடுத்த 2 மணி நேரத்துக்கு எச்சரிக்கை:

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ். ரூ.468 பத்திரங்கள் விவகாரமா?

அடுத்த கட்டுரையில்
Show comments