Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாஞ்சோலை விவகாரம்.! விசாரணை நடத்த தேசிய மனித உரிமைகள் ஆணையம் முடிவு.!!

Senthil Velan
வியாழன், 25 ஜூலை 2024 (18:37 IST)
மாஞ்சோலை தொழிலாளர்கள் வெளியேற்ற விவகாரம் தொடர்பாக  விசாரணை நடத்த டெல்லி தேசிய மனித உரிமைகள் ஆணையம் முடிவு செய்துள்ளது.
 
நெல்லை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டங்களை கடந்த 1929-ம் ஆண்டு பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் என்ற தனியார் நிறுவனம் 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்தது. வரும் 2028-ம் ஆண்டில் அந்த நிறுவனத்தின் குத்தகை காலம் முடியவுள்ள நிலையில் அதற்கு முன்பாகவே அந்த நிறுவனம், தேயிலை தோட்டத் தொழிலாளர்களை கட்டாய ஓய்வில் அனுப்ப முடிவு செய்தது. 

இதற்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், மாஞ்சோலையில் இருந்து தேயிலை தோட்டத் தொழிலாளர்களை வெளியேற்ற இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்றத்தின் மதுரைக்கிளை உத்தரவிட்டது. மேலும் இந்த தேயிலை தோட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது.

ALSO READ: மேகதாது அணை கட்ட அனுமதிக்க கூடாது.! காவிரி - குண்டாறு திட்டத்திற்கு நிதி தேவை.! துரைமுருகன் வலியுறுத்தல்..!
 
இந்நிலையில், மாஞ்சோலை தொழிலாளர்கள் வெளியேற்ற விவகாரம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் வழக்குப்பதிவு செய்துள்ளது.  நெல்லையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் முத்துராமன் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  விரைவில் இந்த வழக்கு தேசிய மனித உரிமை ஆணையத்தில் விசாரணைக்கு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயணிகளை கொள்ளையடிக்கும் ஆம்னி பேருந்துகள்: குறட்டை வீட்டு தூங்கும் திமுக அரசு.. அன்புமணி கண்டனம்..!

சென்னையில் 4 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்.. என்ன காரணம்? முழு விவரங்கள்..!

திமுகவில் இணைந்தார் சத்யராஜ் மகள் திவ்யா.. 2026 தேர்தலில் போட்டியா?

குழந்தைகளை தாக்கும் வாக்கிங் நிமோனியா.. பெற்றோர்கள் உஷாராக இருக்க அறிவுறுத்தல்..!

12 மணி நேரத்தில் 1057 ஆண்களுடன் உல்லாசம்..! புதிய சாதனை படைத்ததாக வீடியோ வெளியிட்ட நடிகை!

அடுத்த கட்டுரையில்
Show comments