ஸ்விக்கியில் ஐஸ் க்ரீம் ஆர்டர் செய்த நபர்… ஆனால் வந்ததோ அணுறை!

Webdunia
திங்கள், 29 ஆகஸ்ட் 2022 (08:40 IST)
ஸ்விக்கியில் தன் குழந்தைக்காக ஐஸ் கிரீம் ஆர்டர் செய்த நபருக்கு தவறுதலாக ஆணுறை டெலிவர் செய்யபப்ட்டுள்ளது.

தற்போதைய நவீன வாழ்வில் ஹோட்டல்களுக்கு உணவு சாப்பிடுவதை வெகுவாகக் குறைத்துள்ளன உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள். அவற்றில் முன்னணியில் இருப்பவை ஸ்விக்கி மற்றும் ஸொமாட்டோ போன்ற நிறுவனங்கள். ஆனால் அவற்றில் அடிக்கடி சில குளறுபடிகள் நடப்பதும் வாடிக்கையாக உள்ளது.

அந்தவகையில் கோயம்புத்தூரைச் சேர்ந்த நபர் ஒருவர் தன் குழந்தைக்காக ஐஸ்கிரீம் மற்றும் சிப்ஸ் ஆகியவற்றை ஸ்விக்கியில் ஆர்டர் செய்துள்ளார். ஆனால் அவருக்கு டெலிவரி செய்யப்பட்ட ஆர்டரில் ஆணுறை பாக்கெட் இருந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சியான அவர் அதைப் புகைப்படம் எடுத்து டிவிட்டரில் பதிவிட வைரலானது.

இதையடுத்து ஸ்விக்கி நிறுவனம் மன்னிப்பு கேட்டு அவருக்கு பணத்தை திருப்பி அனுப்புவதாகக் கூறியுள்ளது. இதுபோல முன்பே சில முறை குளறுபடிகள் நடந்து சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் இணையத்தில் கேலி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீமான் கூட நிரூபிச்சிட்டாரு!.. விஜய் ஒன்னுமில்ல!.. இராம சீனிவாசன் நக்கல்!.

ஜெர்மனி சென்றுவிட்ட ராகுல் காந்தி.. ஒற்றை ஆளாக பாராளுமன்றத்தை கலக்கி வரும் பிரியங்கா காந்தி..!

முட்டை சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? நாடு முழுவதும் ஆய்வு நடத்த மத்திய அரசு உத்தரவு..!

ஹிஜாப் விவகாரம்.. நிதிஷ்குமார் மீது போலீசில் புகார்.. முதல்வர் பதவிக்கு ஆபத்தா?

வெள்ளி விலை வரலாறு காணாத உயர்வு.. இன்று ஒரே நாளில் ரூ.11,000 உயர்ந்ததால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்