Webdunia - Bharat's app for daily news and videos

Install App

500 ரூபாய்க்கு வார வட்டி 50 ரூ – திருச்சியில் கடன் வாங்கி குடித்த மதுப்பிரியர்!

Webdunia
சனி, 16 மே 2020 (15:01 IST)
திருச்சியில் புத்தூர் நால்ரோடு டாஸ்மாக் கடையில் இன்று மது வாங்க ஒருவர் கடன்வாங்கி சரக்கு வாங்கி சென்றுள்ளார்.

தமிழகத்தில் கடந்த 7ம் தேதி திறக்கப்பட்ட மதுக்கடைகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றவில்லை என மூட உத்தரவிடப்பட்டன. தமிழக அரசின் மேல் முறையீட்டின் காரணமாக மதுக்கடைகளை திறப்பதன் மீதான தடையை நீக்கியது உச்ச நீதிமன்றம். அதனால் இன்று முதல் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட சில பகுதிகளை தவிர்த்து பல இடங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

மதுக்கடைகளில் மது வாங்க டோக்கன் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது தமிழக அரசு. அதன்படி காலையிலேயே மதுக்கடைகளில் வந்து குவிந்த மதுப்பிரியர்களுக்கு கிழமை வாரியாக பல வண்ணங்களில் டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 500 பேருக்கு மட்டுமே மதுபான விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருச்சி புத்தூர் நால்ரோடு பகுதிக்கு வந்த சுரேஷ் எனும் மதுப்பிரியர் குடிக்க காசு இல்லாததால் 500 ரூபாய் தந்தால் ஒரு வாரத்துக்கு 50 ரூபாய் வட்டியாக தருவதாக சொல்லி கடன் வாங்கி மது வாங்கும் முயற்சியில் ஈடுபட்டார். தனக்கு இப்போது வேலை இல்லாததால் இந்த நிலைமைக்கு வந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இறந்து போன தாய்.. வங்கிக் கணக்கில் கோடிக்கணக்கில் பணம்! ஒரே நாளில் உலக பணக்காரன் ஆன நொய்டா இளைஞர்!

திருப்பதியில் AI தொழில்நுட்பம்.. பக்தர்களின் தரிசன நேரம் குறையுமா? முன்னாள் அதிகாரிகள் சந்தேகம்!

உண்மையான இந்தியர் யார் என்பதை சுப்ரீம் கோர்ட் முடிவு செய்ய வேண்டாம்: பிரியங்கா காந்தி காட்டம்..!

தமிழக மாணவனை கட்டாயப்படுத்தி போருக்கு அனுப்பிய ரஷ்யா? - நடவடிக்கை எடுக்குமா இந்திய அரசு?

நான் இருக்கும் வரை வட இந்தியர்களை ஓட்டுப்போட விட மாட்டேன்! - சீமான் உறுதி!

அடுத்த கட்டுரையில்
Show comments