Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்ப்பிணி மனைவி, மாமனார், மாமியாரை வெட்டி கொன்ற வாலிபர்.. ராணிப்பேட்டையில் அதிர்ச்சி சம்பவம்..!

Mahendran
வியாழன், 15 மே 2025 (12:04 IST)
ராணிப்பேட்டை பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர், தனது கர்ப்பிணி மனைவி, மாமனார் மற்றும் மாமியாரை வெட்டி கொலை செய்த நிலையில், அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
 
ராணிப்பேட்டை பகுதியை சேர்ந்த பாலு என்பவருக்கும் புவனேஸ்வரி என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. புவனேஸ்வரி தற்போது 8 மாத கர்ப்பமாக உள்ளார்.
 
இந்த நிலையில், புவனேஸ்வரிக்கும் விஜய் என்பவருக்கும் தவறான பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, புவனேஸ்வரி தனது கணவரை பிரிந்து, தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
 
இதை அறிந்த பாலு, தனது மனைவியின் கள்ளக்காதல் குறித்து ஆத்திரம் அடைந்தார். ஒரு கட்டத்தில் நேராக மாமியார் வீட்டிற்கு சென்று, அங்கு தனது கர்ப்பிணி மனைவி புவனேஸ்வரி, மாமனார் அண்ணாமலை மற்றும் மாமியார் ராஜேஸ்வரி ஆகிய மூவரையும் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளார்.
 
இதுபற்றி தகவல் அறிந்த காவல்துறையினர், உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பாலுவை கைது செய்தனர். அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
விசாரணையின் போது, "தன்னுடைய மனைவியின் கள்ளத்தொடர்பு காரணமாக தான் வெறி பிடித்து மூவரையும் வெட்டி கொலை செய்தேன்," என்று அவர் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
 
இந்த சம்பவம், ராணிப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாதந்தோறும் ₹90,000 ஜீவனாம்சம்: வருமானத்தை மறைத்த கணவனுக்கு ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

டிரம்ப்பின் 'அச்சுறுத்தலுக்கு' எலான் மஸ்க்-கின் மர்மமான பதில்: வெளியேற்றப்படுவாரா மஸ்க்?

உத்தரகாண்ட் மாநிலத்தில் கனமழை பெரும் சேதம்: ஆற்றில் உள்ள சிவன் சிலை மூழ்கும் அளவுக்கு வெள்ளப்பெருக்கு..!

மழையில் நனைந்து கொண்டு செல்போன் பேசலாமா? அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்..

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் வீட்டில் விசேஷம்.. குவியும் வாழ்த்துக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments