எல்லா மதங்களையும் மதிக்க வேண்டும்.. பிறர் புண்படுத்தும் விதமாக பேசக்கூடாது - உதயநிதிக்கு மம்தா அறிவுரை..!

Webdunia
செவ்வாய், 5 செப்டம்பர் 2023 (08:17 IST)
எல்லா மதங்களையும் மதிக்க வேண்டும் என்றும் ஒரு குறிப்பிட்ட மதத்தினர் மனம் புண்படுத்தும் படி பேசக்கூடாது என்றும் அமைச்சர் உதயநிதிக்கு  மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவுரை கூறியுள்ளார். 
 
உதயநிதி ஸ்டாலினின் சனாதன ஒழிப்பு கருத்துக்கு ஆட்சேபம் தெரிவித்துள்ள மம்தா பானர்ஜி,  உதயநிதி ஒரு ஜூனியர் என்றும் அவர் எந்த அடிப்படையில் இந்த கருத்தை கூறினார் என்று எனக்கு தெரியவில்லை என்றும்  தமிழ்நாட்டு தலைவர்கள் எல்லா மதங்களையும் மதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். 
 
ஒவ்வொரு மதத்திற்கும் ஒரு நம்பிக்கை உள்ளது அந்த நம்பிக்கையை புண்படுத்தும் வகையில் யாரும் பேசக்கூடாது என்றும் இந்தியா என்பது வேற்றுமையில் ஒற்றுமையில் காணும் நாடு என்றும் தம்மை பொறுத்தவரை சனாதன தர்மத்தை தான் மதிப்பதாகவும் அந்த தெரிவித்தார். 
 
சனாதனம் வேதங்களில் இருந்து பிறந்தது என்றும் மக்களின் தெய்வம் நம்பிக்கையின் அடிப்படையில் உள்ள பல கோயில்கள் சனாதனம் வழியில் தான் கட்டப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்கள்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பட்டப்பகலில் பள்ளி மாணவியை கொலை செய்யும் அளவிற்கு, துணிச்சல் எங்கிருந்து வந்தது? ஈபிஎஸ் ஆவேசம்

TN TET 2026: சிறப்பு டெட் தேர்வு!.. விண்ணப்பங்கள் வரவேற்பு!.. முழு தகவல்!...

பாஜகவும் தேர்தல் ஆணையமும் சதி: தொல். திருமாவளவன் குற்றச்சாட்டு!

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மண்டலமாக வலுப்பெறும்: நவம்பர் 21 முதல் கனமழை..!

எங்கருந்து வந்தீங்க?!. SIR படிவம் தொடர்பாக கோபப்பட்ட மன்சூர் அலிகான்!..

அடுத்த கட்டுரையில்
Show comments