Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கூவத்தூரில் கும்மாளம் போட்டவர் எடப்பாடி பழனிசாமி.. கமல் கட்சி கடும் கண்டனம்..!

கூவத்தூரில் கும்மாளம் போட்டவர் எடப்பாடி பழனிசாமி.. கமல் கட்சி கடும் கண்டனம்..!
, சனி, 9 டிசம்பர் 2023 (18:20 IST)
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை பச்சோந்தி என எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்த நிலையில்  அதற்கு அக்கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் ’சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் மழை தொடங்குவதற்கு முன்னரே தலைமறைவான எடப்பாடி பழனிசாமி பதுங்கு குழுவில் இருந்து வெளியே வந்து மக்கள் தொண்டு செய்பவரை விமர்சிக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும் பொதுமக்கள் பற்றி கவலை கொள்ளாமல் கூவத்தூரில் கும்மாளம் அடித்து கொண்டிருந்தவர்களுக்கு தனது சம்பளத்தின் ஒரு பகுதியை மக்களுக்கு செலவழிக்கும் தலைவரை விமர்சிக்க என்ன தகுதி உள்ளது என்றும்  மக்கள் நீதி மய்யம் கேள்வி எழுப்புவது. 
 
மேலும் கஜா புயலின் போது கமல்ஹாசன் களத்தில் இறங்கி நிவாரண பணிகளை செய்து கொண்டிருக்கும் போது ஹெலிகாப்டரில் வந்து வேடிக்கை பார்த்தவர் தான் எடப்பாடி பழனிச்சாமி என்றும்  தனது வாழ்நாளை எடுபிடி பழனிச்சாமியாக கழித்த அவர் அந்த கட்சியின் தலைவர் இறந்த பின்னர்  சென்று கூழைக்கும்பிடு போட்டு திடீரென முதல்வரானார் என்றும் மக்கள் நீதி மய்யம் கண்டனம் தெரிவித்துள்ளது.
 

Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண தொகை எவ்வளவு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!