Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மக்கள் நலக் கூட்டணி அதிமுகவுக்கு ஆதரவாகத்தான் முடியும் - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

மக்கள் நலக் கூட்டணி அதிமுகவுக்கு ஆதரவாகத்தான் முடியும் - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
, புதன், 10 பிப்ரவரி 2016 (15:18 IST)
மக்கள் நலக் கூட்டணியின் செயல்பாடு அதிமுகவுக்கு ஆதரவாகத்தான் முடியும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் குற்றம் சாட்டியுள்ளார்.
 

 
இது குறித்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், “தமிழகத்தில் ஸ்டிக்கர் ஆட்சி நடை பெறுகின்றது. அதிமுகவின் சாதனைகள் மந்திரிகளை பலமுறை மாற்றியது மற்றும் ஆயிரம் கோடிக்கு மேலாக லஞ்சம் வாங்கியது.
 
மேலும், பல்கலைக் கழக துணை வேந்தர் நியமனம் 8 கோடியிலிருந்து 10 கோடி வரை பணம் வாங்கியதுதான். மக்கள் நலக் கூட்டணியின் செயல்பாடு அதிமுகவுக்கு ஆதரவாகத்தான் முடியும்.
 
கூட்டணி குறித்து காங்கிரஸ் கட்சியின் மேலிடம் முடிவு எடுக்கவில்லை. விரைவில் முடிவு எடுப்பார்கள். கட்சியின் மேலிட தலைவர்கள் திமுகவுடன் பேசுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன். ஓரிரு நாளில் மேலிட தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்துவார்கள்” என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil