Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமேசான் காட்டு தீ அணைய பிராத்தனை செய்யுங்கள் - நடிகர் விவேக்

Webdunia
சனி, 24 ஆகஸ்ட் 2019 (19:46 IST)
அமேசான் காட்டில்  வாழும் அரியவகை உயிரிங்கள், பறவைகள், பூச்சியினங்கள் எல்லாம் அழிந்துவிட்டதாக தகவல் வெளியாகின. இந்நிலையில் அமேசான் காடுகளில் பற்றி எரியும் காட்டுத் தீயை அணைக்கும் முயற்சிக்கு உதவ ஆயுதப் படைகளை அனுப்ப பிரேசில் அதிபர் போல் சாயர் போல்சனாரூ உத்தரவிட்டுள்ளார். 
இயற்கை வளங்கள் உள்ள பகுதிகள், பூர்வகுடிகள் வாழும் இடங்கள், குடியிருப்புப் பகுதிகளை ஒட்டியுள்ள காடுகள் ஆகிய இடங்களுக்கு படையினர் அனுப்பப்படுவர்.
 
அமேசான் தீ கட்டுப்படுத்தப்படும் வரை பிரேசில் உடனான வர்த்தக ஒப்பந்தத்தை அமலாக்கப் போவதில்லை என்று பிரான்ஸ் மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகள் கூறியுள்ளன.
 
பிரேசிலில் இருந்து மாட்டிறைச்சி இறக்குமதி செய்யப்படுவதை தடை செய்வது குறித்து பரிசீலிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்தை பின்லாந்து கோரியுள்ளது.
 
காட்டுத் தீயை அணைக்க சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்கள் பிரேசிலின் பல்வேறு நகரங்களிலும் வெள்ளியன்று போராட்டம் நடத்தினர். இது உலகெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி  வருகிறது.
இந்த நிலையில் அமேசான் காட்டுத்தீயை அணைக்க வேண்டுமென ஹாலிவுட், பாலிவுட், என பல நட்சத்திரங்கள் குரல் கொடுத்து வருகின்றனர். 
இதுதொடர்பாக நடிகர் விவேக் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது :
அமேசான் காட்டில் கொழுந்துவிட்டெரியும் தீயை நம்மால் அணைக்க முடியாது. நமக்கு கட்டளை இட முடிந்தது எல்லாம் அமேசானின் பிரைம் பார்ப்பது மட்டும்தான். ஆனால் நாம் சுற்றுப்பகுதியில் மரங்கள் நட்டுவைப்பதன் மூலம் அதை அமேசான் காடு போல் மாற்ற முடியும். நாம் இந்த காட்டு தீ அணைய மழை பெய்ய வேண்டுமென பிராத்தனை செய்வோம் என்று தெரிவித்துள்ளார். 
 
 

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments