கொரோனாவை வைத்து ஆட்சியை பிடிக்க பார்க்கிறார் ஸ்டாலின்! – மாஃபா காட்டம்!

Webdunia
சனி, 16 மே 2020 (10:30 IST)
கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு மெத்தனம் காட்டுவதாக எதிர்கட்சி தலைவர் குற்றம் சொல்லி வருவதற்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது. முக்கியமாக சென்னையில் பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவ அதிமுக அரசின் செயல்பாடுகளே காரணம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

மு.க.ஸ்டாலின் தொடர்ந்து குற்றம் சாட்டி வருவது குறித்து பேசியுள்ள அதிமுக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், எதிர்கட்சி தலைவர் மக்களை திசை திருப்பும் நோக்கில் செயல்படுவதாகவும், மக்களிடன் குறைகளை கேட்டு வாங்கி அதிகாரிகளிடம் சேர்ப்பது போல இப்போதே தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், இந்த கொரோனா விவகாரத்தை வைத்து ஆட்சியை பிடிக்க அவர் முயற்சிப்பதாகவும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபாவளி மது விற்பனை ரூ.500 கோடியை தாண்டுமா? தயாராகிறது டாஸ்மாக்

பாகிஸ்தானில் இருந்து வந்த 200 ட்ரோன்கள் வழிமறிப்பு.. 287 கிலோ ஹெராயின் பறிமுதல்..!

சீனாவுக்காக அமெரிக்காவை உளவு பார்த்த இந்திய வம்சாவளி? - அமெரிக்காவில் அதிர்ச்சி கைது!

இப்படி எல்லாத்தையும் இழந்து நிக்கிறியே நண்பா! புதினுக்காக கண்ணீர் விட்ட ட்ரம்ப்!

ChatGPTல் 18+ கதைகளையும் இனி கேட்கலாம்: சாம் ஆல்ட்மேன் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments