Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மதுரை இளைஞருக்கு சர்வதேச தொழில்நுட்ப வல்லுனர் விருது

மதுரை இளைஞருக்கு சர்வதேச தொழில்நுட்ப வல்லுனர் விருது
, வியாழன், 7 ஜூலை 2016 (13:18 IST)
மதுரையை சேர்ந்த இளைஞர் ராஜாரமனுக்கு கனடா நாட்டின் தமிழ் இலக்யத்தோட்ட அமைப்பு சார்பில், சர்வதேச தொழில்நுட்பட வல்லுனர் என்ற விருதை வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை வாங்கும் முதல் தமிழக இளைஞனர் ராஜாராமன் ஆகும்.


 
 
ராஜாராமன் சென்னை இன்போசிஸ் நிறுவனத்தில் தொழில்நுட்ப ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். சர்வதேச தொழில்நுட்பட வல்லுனர் விருதை பெற்ற இவர் கூறியபோது, தமிழை தவறு இன்றி எழுத மூன்று ஆண்டுகளுக்கு முன் நாவி என்ற சந்திப்பிழைத் திருத்தியை உருவாக்கி, எனது இணையதள வலைப்பூவில் இலவசமாக அனைவரும் பயன்படுத்த வெளியிட்டேன்.
 
தற்போது வாணி என்ற மற்றொரு தமிழ் எழுத்துப்பிழை திருத்தியை உறுவாக்கியுள்ளேன். முதன் முதலில் தமிழ் எழுத்துப்பிழை திருத்தியை உருவாக்கியிருந்தாலும், பலரது முயற்சியால்தான் வெற்றி பெற்றிருக்கிறது என்றார்.
 
மேலும் ராஜாராமனுக்கு இந்த விருதுடன் கிடைத்த பணத்தை ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தில் துவங்கவிருக்கும் இருக்கைக்கு வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நேற்று செல்வாம்பாள், இன்று நந்தினி, நாளை யார்?