Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.80 கோடியில் போட்ட சாலை ஒரே ஆண்டில் பாழ்: மதுரை மக்கள் அதிருப்தி..!

Webdunia
திங்கள், 27 பிப்ரவரி 2023 (20:23 IST)
ரூ.80 கோடியில் போட்ட சாலை ஒரே ஆண்டில் பாழ்: மதுரை மக்கள் அதிருப்தி..!
ரூ.80 கோடி செலவில் போடப்பட்ட தார் சாலை ஒரே ஆண்டில் பாழாகி போனதை எடுத்து மதுரை மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மதுரை மாவட்டத்தாவணி ஆம்னி பஸ் நிலையம் முதல் சர்வேயர் காலனி வரை ஐந்து கிலோ மீட்டர் தொலைவிற்கு நெடுஞ்சாலை துறை கடந்த ஆண்டு தார் சாலை ஒன்றை போட்டது. இந்த சாலை ஒருங்கிணைந்த பஸ் நிலையத்தில் இருந்து திண்டுக்கல் செல்லும் மதுரை பைபாஸ் சாலையையும் இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளது. இந்த நிலையில் மாநகராட்சி தோண்டிய குழிகளை மூடாமல் போட்டுச் சென்றதால் ஐந்து கிலோமீட்டர் தொலைவிற்கு போடப்பட்ட இந்த சாலை தற்போது குண்டும்குழியுமாக உள்ளது. 
 
சாலை பிரமாண்டமாக இருந்தாலும் சாலையின் சில பகுதிகளில் குழாய் பதிக்க தோண்டியதன் காரணமாக தற்போது சாலை பாழாகி விட்டதாகவும் வாகன ஓட்டிகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
80 கோடி ரூபாய் செலவு செய்து போடப்பட்ட தார் சாலை ஒரே ஆண்டில் பாழானதை அடுத்து மதுரை மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

17 வயது சிறுமியுடன் உல்லாசம் அனுபவிக்க வந்த முதியவர்.. காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை..!

தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்ததும், வேடத்தை கலைத்துவிட்டார் பிரதமர் மோடி! முதல்வர் ஸ்டாலின்..!

ராகுல் காந்தியை புகழ்ந்ததால் அதிருப்தி.. செல்லூர் ராஜூ மீது ஈபிஎஸ் நடவடிக்கையா?

சிங்கப்பூரில் பரவி வரும் புதிய வகை கொரோனாவால் பாதிப்பா? பொது சுகாதாரத்துறை விளக்கம்..!

ரேவண்ணா பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வேண்டும்: மத்திய அரசுக்கு, சிறப்பு புலனாய்வு குழு கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments