Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரை பாலமேட்டில் இன்று ஜல்லிக்கட்டு: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

Webdunia
வெள்ளி, 15 ஜனவரி 2021 (07:27 IST)
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளின் போது மதுரை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டிகள் வெகு சிறப்பாக நடைபெறும் என்பது தெரிந்ததே. இந்த போட்டிக்கு தடை விதிக்கப்பட்டபோது ஒட்டுமொத்த தமிழக மக்கள் கொதித்தெழுந்து அந்த தடையை நீக்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் நேற்று மதுரை அவனியாபுரத்தில் வெகுசிறப்பாக ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது என்பதும் இந்த போட்டியை காண காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி நேரில் வந்து இருந்தார் என்பதும் தெரிந்ததே 
 
இதனை அடுத்து இன்று மதுரை பாலமேட்டில் பிரமாண்டமான ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டி இன்று காலை 8 மணிக்கு தொடங்கும் என்றும் மாலை 4 மணிக்கு முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மொத்தம் 800 காளைகள் பங்கேற்க இருப்பதாகவும் அந்த காளைகளை அடக்க 651 காளையர்கள் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
 
இன்று பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதை அடுத்து அந்த பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments