மதுரையில் ஐந்து பைசாவுக்கு பிரியாணி! – சீல் வைத்த மாநகராட்சி!

Webdunia
வியாழன், 22 ஜூலை 2021 (10:06 IST)
மதுரையில் ஐந்து பைசாவுக்கு பிரியாணி என விளம்பரம் செய்த கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

மதுரை செல்லூர் பகுதியில் புதிதாக திறந்த பிரியாணி கடை ஒன்றில் மக்களை ஈர்க்கும் விளம்பர நோக்கில் 5 பைசாவுக்கு பிரியாணி என்று விளம்பரம் செய்துள்ளனர். இதனால் சுற்றுவட்டாரத்தில் மக்கள் பலர் பழைய 5 பைசாவுடன் பிரியாணி கடையில் குவிந்ததால் அப்பகுதி கூட்டமாக இருந்துள்ளது.

தற்போது தமிழகத்தில் கொரோனா விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் விதிமுறைகளை மீறி பிரியாணி கடையில் கூட்டம் அதிகமாக குவிந்ததால் சம்பந்தப்பட்ட பிரியாணி கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். புதிய பிரியாணி கடை திறக்கப்பட்ட மறுநாளே சீல் வைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆளுநரின் குடும்பத்தார் மீது வரதட்சணை, கொலை முயற்சி குற்றச்சாட்டு: மருமகள் பரபரப்பு புகார்!

பதவியேற்ற 9 மாதங்களில் பிரசார் பாரதியின் தலைவர் விலகல்.. என்ன காரணம்?

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற சிஐஎஸ்எஃப் பாதுகாப்புடன் அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னையில் நீர் தேக்கமில்லை; விஜய் வீட்டிலிருந்து பேசுகிறார்! டிகேஎஸ் இளங்கோவன்..!

தீபம் ஏற்ற உரிமை இல்லையா?... திமுக அரசை விளாசும் வானதி சீனிவாசன்...

அடுத்த கட்டுரையில்
Show comments