Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரை மீனாட்சியம்மன் கோயில் உண்டியலில் ரூ.55 லட்சம்

Webdunia
வியாழன், 26 மே 2016 (06:07 IST)
மதுரை அருள்மிகு மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோயில் மே மாதம் உண்டியலின் வருவாய்  ரூ.55.68 லட்சம் வந்துள்ளது.

 

 
மதுரை அருள்மிகு மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோயில் மற்றும் அதன் உபகோயில்களான முக்தீஸ்வரர், செல்லூர் திருவாப்புடையார், மாரியம்மன் கோயில்கள் உண்டியல்களும் மாதா மாதம் எண்ணப்படும்.
 
அதுபோல அருள்மிகு மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோயிலின் பழைய திருக்கல்யாண மண்டபத்தில், மே மாத உண்டியல் எண்ணிக்கை புதன்கிழமை நடைபெற்றது. கோயில் இணை ஆணையர் என்.நடராஜன் முன்னிலையில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் திருக்கோயில் உண்டியல் மூலம் ரூ.55.68 லட்சமும், தங்கமாக 472 கிராம் பொருள்களும், வெள்ளியாக 695 கிராம் பொருள்களும் கிடைத்துள்ளன.
 
அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளின் பக்தர்கள் 200 டாலர்களைச் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோயில் உபகோயில் உண்டியல்களில் ரூ.4.69 லட்சம் காணிக்கை செலுத்தப்பட்டிருந்தது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்டாகிராமில் வந்த லிங்க்: க்ளிக் செய்த அடுத்த நிமிடத்தில் பணத்தை இழந்த இளம்பெண்..

ஸ்டெர்லைட் தடையை மறுஆய்வு செய்ய கோரிய மனு : உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பாஜக பயப்படுகிறது.. காங்கிரஸ் பிரமுகர் விமர்சனம்..!

மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய இளைஞரின் தாய் மீது புகார்.. நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஐதராபாத்தில் தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கியிருக்கின்றாரா கஸ்தூரி? தனிப்படை விரைவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments