Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உள்ளே புகைப்படங்கள் எடுக்கும் வழக்கு: நீதிபதிகள் அதிரடி உத்தரவு..!

Webdunia
செவ்வாய், 6 ஜூன் 2023 (15:14 IST)
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அனுமதியின்றி எடுக்கப்பட்ட சிற்பங்கள் மற்றும் சிலைகளின் புகைப்படம் மற்றும் வீடியோ ஆகியவற்றை சமூக வலைதளங்களில் இருந்து நீக்க உத்தரவிடக் கோரிய வழக்கு கடந்த சில வாரங்களாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் நடைபெற்று வந்தது.
 
இந்த நிலையில் இந்த வழக்கில் இன்று புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உள்ளே புகைப்படங்கள் எடுக்கவோ, அதை சமூக வலைதளங்களில் பதிவிடுவதற்கு தடை விதிக்கவோ முடியாது என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
 
அமெரிக்கா போன்ற நாடுகள் அங்கே 100 வருட புராதன சின்னங்கள் என்று கூறி படங்களை எடுத்து பல கோடிக்கு வியாபாரம் செய்யும்  சூழலில், நாம் 2000 வருட புராதன சின்னங்களை வைத்துக் கொண்டு சும்மா இருக்கிறோம் என நீதிபதிகள் சுப்ரமணியன், விக்டோரியா கவுரி அமர்வு கருத்து தெரிவித்தனர்.
 
கோயிலில் அனுமதியின்றி எடுக்கப்பட்ட சிற்பங்கள் மற்றும் சிலைகளின் புகைப்படம் மற்றும் வீடியோ ஆகியவற்றை சமூக வலைதளங்களில் இருந்து நீக்க உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்படுவதாகவும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஸ்ரேல் ஒரு போர் குற்றவாளி.. பிரதமர் நேதன்யாகுவிற்கு கைது வாரண்ட்!? - சர்வதேச நீதிமன்றம் அதிரடி!

ஈஷா மண் காப்போம் சார்பில் நெல்லையில் வாழை திருவிழா! - நவ 24-ஆம் தேதி நடைபெறுகிறது!

சென்னை சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை.. நாளை சிறப்பு முகாம்..!

விஸ்வநாதன் ஆனந்தின் மாமனாரிடம் மோசடி செய்ய முயற்சி.. சைபர் கிரைம் போலீசில் புகார்..!

17 ஆயிரம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments